ஐ ஹேட் யூ பட் – 33
(Tamil Kamakathaikal - I Love U But 33)
Tamil Kamakathaikal – வண்டியில் கோணபன அக்ரஹாரத்தை தாண்டி செல்கையில்.. இயல்பான குரலில் ப்ரியா ஆரம்பித்தாள்.. செண்பகத்தின் மனதை அறிய தூண்டில் போட்டு பார்த்தாள்..!!
“என் ஃப்ரண்ட் ஒருத்தி சென்னை ஐ.பி.எம்ல வொர்க் பண்றா செண்பகம்..!! அவளும் டீம்லீட்தான்.. அவங்க டீம்க்கு ஒரு ரிசோர்ஸ் தேவைப்படுது.. யாராவது தெரிஞ்ச ஆளு இருந்தா சொல்லுடின்னு கேட்டுட்டே இருக்கா.. அவ சொன்ன ப்ரோஃபைல் எக்ஸாக்டா உனக்கு மேட்ச் ஆகுது..!!”
“ஓ..!!”
“உனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கா..?? நல்ல டீம்.. வொர்க்லாம் எக்சலன்ட்டா இருக்கும்.. உன் கேரீர்க்கு ரொம்ப யூஸ்ஃ புல்லா இருக்கும்.. நல்ல ஆப்பர்ச்சூனிட்டி..!! ஸி.டி.ஸி.யும் இங்க விட ரெண்டு லட்சம் ஜாஸ்தியா கெடைக்கும்.. என்ன சொல்ற..??”
“இ..இல்லக்கா.. வேணாம்..!! எனக்கு பெங்களூர்ல இருக்கனும்னுதான் இன்ட்ரஸ்ட்..!!”
செண்பகம் தனது இயல்பான விருப்பத்தை சொல்ல, ப்ரியாவுக்கு மனதுக்குள் பரபரவென ஒரு எரிச்சல் கிளம்பியது. ‘தெரியுண்டி.. நீ போக மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும்.. தெரிஞ்சுக்கிட்டேதான் கேட்டேன்..!! நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஊர் சுத்துறதுக்கும்.. சேந்து கூத்தடிக்கிறதுக்கும்.. என் மூலமாவே ரெஸ்யூம் ஃபார்வர்ட் பண்ணி இந்த கம்பனிக்குள்ள நொழைஞ்சவளாச்சே நீ..?? நீயா பெங்களூர் விட்டு கெளம்புவ..?? வேலை கெடைக்கிற வரை ரெண்டு பேருமே எப்புடி கமுக்கமா இருந்தீங்க..?? வேலை கெடைச்சதுந்தான உங்க திருட்டுத்தனம் எனக்கே புரியுது..!! கோடி ரூவா குடுத்தாலும் நீ போகமாட்டன்னு எனக்கு தெரியும்..!!’ என்று மனதிற்குள்ளேயே செண்பகம் மீது வெறுப்பை உமிழ்ந்தவள், வண்டியை சரக்கென்று சடன் ப்ரேக் அடித்து நிறுத்தினாள்.
“எ..என்னக்கா..?? என்னாச்சு..??” குழப்பமாய் கேட்ட செண்பகத்திடம்,
“ஹேய்.. ஸாரி செண்பகம்.. எனக்கு சிங்கசந்த்ரால ஒரு முக்கியமான வேலை இருக்கு.. இப்போதான் ஞாபகம் வந்தது..!! நான் இப்படி ரைட் எடுக்குறேன்.. நீ ஏதாவது ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போயிடு..!!” என்று கூலாக சொல்லிவிட்டு, பாதிவழியிலேயே அவளை இறக்கிவிட்டு பறந்தாள் ப்ரியா.
ப்ரியாவுடைய மனதில் இருந்த வலியை அவள் ஒருத்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அவளுடைய காதல் கானல் நீராய் போனதில் அவளுக்குள் எழுந்த ஏமாற்றம், அவளுடைய மனதையும் மூளையும் வெகுவாக பாதித்திருந்தது. எந்த நேரமும் ஒரு உணர்ச்சி அழுத்தத்தின் பிடியிலேயே இருந்தாள். டீமில் உள்ளவர்களிடம் காரணம் இல்லாமல் எரிந்து விழுந்தாள். ஆனால்.. வீட்டுக்கு சென்றால் வேறுவிதமாக மாறிவிடுவாள். அவளுடைய உற்சாகமும் துள்ளலும் அடங்கிப்போய், அமைதியும் விரக்தியுமாய் திரிந்தாள். மகளுடைய மாற்றத்தை வரதராஜனால் உடனடியாக புரிந்து கொள்ள முடிந்தது.
“ஏன்மா.. எப்போவும் எதையோ பறிகுடுத்த மாதிரியே இருக்குற..??” என்று அன்பாக கேட்டார்.
“இ..இல்லையே.. நான் எப்போவும் போலதான் இருக்குறேன்..!!” ப்ரியா சமாளிக்க முயன்றாள்.
“ஹ்ம்ம்.. அந்த எடம் அமையாம போனதுல உனக்கு எதுவும் வருத்தமாமா..??”
“ச்சேச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்ல டாடி..!! யாருக்கு யாருன்னு எழுதி வச்சபடிதான நடக்கும்..?? அதுக்காகலாம் கவலைப்பட்டு என்ன ஆகப் போகுது.. எனக்கு ஒன்னும் வருத்தம்லாம் இல்ல டாடி..!!”
மனதில் கொள்ளை கொள்ளையாய் இருந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் மறைத்துக்கொண்டு, ப்ரியா பொய் சொன்னாள். அப்படியே அப்பாவுடைய மடியில் தலைசாய்த்து படுத்துக் கொண்டாள். அவரும் இவளுடைய தலையை இதமாக கோதிவிட்டவாறே சொன்னார்.
“கவலைப்படாதமா.. கூடிய சீக்கிரம் அப்பா உனக்கு இன்னொரு நல்ல மாப்ளையை தேடி கொண்டு வர்றேன்..!!”
“டாடி ப்ளீஸ்.. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..!!”
“ஐயோ.. ஏன்மா அப்படி சொல்ற..??”
“ப்ளீஸ் டாடி.. என்னை எதுவும் கேக்காதீங்க..!!”
முட்டிக்கொண்டு வருகிற கண்ணீரை அடக்கிக்கொண்டே ப்ரியா சொன்னாள். மகளுடைய காதலை மறைமுகமாக கெடுத்துவிட்டோம் என்பதை அறியாமலே வரதராஜன் அவளுக்காக உருகினார். அவளுடைய நெற்றியில் முத்தமிட்டு அன்பை பொழிந்தார்.
ப்ரியாவின் வீட்டில் இப்படி என்றால்.. அசோக்கின் வீட்டில் நிலைமை வேறு விதமாக இருந்தது..!! அசோக்கின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது..!! பெண் பார்த்த விஷயத்தில் அசோக் பல்டி அடித்ததில் இருந்தே, ராஜேஷும் செல்வியும் அவனை மதிப்பதே இல்லை. அவனை பார்க்க நேரிடும்போதெல்லாம் முறைப்பையே வெளிப்படுத்தினர். அந்த பிரச்னையன்று அவன் சொன்னதையே குத்திக்காட்டி பேசினார்கள்..!!
மடிக்கணினி மூலமாக இணையத்தை தொடர்புகொள்ள முடியாத எரிச்சலுடன், அசோக் அண்ணனிடம் வந்து கேட்டான்.
“ஹேய்.. நெட் கனெக்ட் ஆகலடா..!!”
“என்னை பாத்தா கஸ்டமர்கேர் ஆள் மாதிரியா தெரியுது உனக்கு..??” ராஜேஷின் குரலில் ஆரம்பத்திலேயே ஒரு கிண்டல்.
“ப்ச்.. போன மாச இன்டர்னட் பில்க்கு செக் ஒன்னு குடுத்தனே.. என்னாச்சு..??”
“அதுவா..?? அந்த டேபிள்ல பத்திரமா வச்சிருக்கேன் பாரு..!!”
“என்னது..?? டேபிள்ல பத்திரமா வச்சிருக்கியா..?? டெபாசிட் பண்ண சொல்லித்தான உன்கிட்ட குடுத்தேன்..??”
“ஆமாப்பா.. நீ இன்னைக்கு டெபாசிட் பண்ணுன்னு சொல்வ.. அப்புறம் நாளைக்கே ‘ஒரு கோவத்துல டெபாசிட் பண்ண சொல்லிட்டேன்’னு சொல்லி சண்டை போடுவ.. எதுக்குடா வம்புன்னு நான் செக்கை பத்திரமா வச்சிருக்கேன்..!! உன் பேச்சை நம்பி.. இனி நான் எந்த வேலையும் செய்ற மாதிரி இல்ல..!!”
அலட்சியமாக சொல்லிவிட்டு எழுந்து செல்கிற அண்ணனை, அசோக் கடுப்பாக பார்த்தான். அப்புறம் அந்த செக்கை தூக்கிக்கொண்டு அவனே பி.எஸ்.என்.எல் ஆபீசுக்கு ஓடினான். ராஜேஷ் இப்படி என்றால் செல்வி வேறு மாதிரி அசோக்கை நோகடித்தாள்.
அன்று அசோக்கின் கல்லூரி நண்பன் ஒருவன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான். இருவரும் டிவி பார்த்துக்கொண்டே கதையடித்துக் கொண்டிருந்தார்கள். ‘காபி போடுங்க அண்ணி..!!’ என்று அசோக் சொல்லி அரை மணி நேரம் ஆயிற்று. காபி ஹாலுக்கு வந்த பாடில்லை. சந்தேகமுற்ற அசோக் எழுந்து வீட்டுக்குள் சென்று பார்த்தான். கிச்சனில் செல்வியை ஆளைக் காணோம். உள்ளறைக்குள் துணி மடித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன அண்ணி.. வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க.. நீங்க இங்க வந்து உக்காந்திருக்கீங்க..??”
“அங்க வந்து நான் என்ன பண்ணப்போறேன்.. நான் ஏதாவது எதார்த்தமா பேசுவேன்.. அது உனக்கு புடிக்காது.. ‘ஏன் இப்படி குடும்ப மானத்தை வாங்குறீங்க’ன்னு கத்துவ.. எனக்கெதுக்கு வம்பு..?? நீயே உன் பிரண்டுட்ட பேசி பேசி.. நல்லா நம்ம குடும்ப மானத்தை காப்பாத்து..!!” செல்வி கேலியாக சொல்ல, அசோக் அவளை முறைத்தான்.
“சரி.. காபி போட்டு குடுத்துட்டாவது.. இங்க வந்து உக்காந்துக்கலாம்ல..??”
“ஆமாம்.. நீ காபி போட சொல்வ.. போட்டு எடுத்துட்டு வந்தா.. ‘நான் என்ன காபியா கேட்டேன்.. காராபூந்தில கேட்டேன்’னு சொல்வ..!! மாத்தி மாத்தி பேசுவ.. உன்கூடலாம் என்னால போராட முடியாதுடா சாமி..!! எது வேணுன்னாலும்.. நீயே போட்டுக்கோ..!!”
சலிப்பாக சொல்லிவிட்டு மடித்த துணியுடன் பீரோ நோக்கி செல்கிற அண்ணியை, அசோக் எரிச்சலாக பார்த்தான். அப்புறம் கிச்சன் சென்று கையெல்லாம் சுட்டுக்கொண்டு காபி போட்டான்.
ப்ரியா மீது கொண்ட காதலுக்காக அசோக் தனது வீட்டில் இருப்பவர்களை பகைத்துக் கொண்டான். ஆனால்.. அந்த ப்ரியாவோ ஆபீஸில் செய்கிற அட்டூழியங்கள் அவனுக்கு வேதனையையே கொடுத்தன..!! தன் மீது மட்டும் இல்லாமல்.. தனக்கு உறவுக்காரி என்ற காரணத்துக்காக செண்பகம் மீதும் அவள் வெறுப்பை உமிழ்வதாக அவனுக்கு தோன்றியது..!! ப்ரியாவின் மீதான ஒரு இனம்புரியாத வெறுப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது..!! அந்த மாதிரி அவனுடைய வெறுப்பை அதிகமாக்கிய இன்னொரு சம்பவம்..
மென்பொருளின் முதல்கட்ட டெலிவரிக்காக.. க்ளையன்ட் கம்பனியில் இருந்து.. அவர்கள் டீமில் இருப்பவர்களுக்கு தனித்தனியாக நற்சான்றிதழ்கள் அனுப்பி வைத்தார்கள்..!! யாராருக்கு சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற பட்டியலை அவர்களுக்கு அனுப்பி வைத்தது ப்ரியாதான்..!! அதில் செண்பகம் பெயரை சேர்க்காமல் விட்டுவிட்டாள்..!! டீமில் எல்லோர் கையிலிருக்கும் சான்றிதழகை செண்பகம் சற்றே ஏக்கமாக பார்க்க.. அசோக்கிற்கு பொறுக்க முடியவில்லை..!! ப்ரியாவிடம் சென்று சண்டை பிடித்தான்..!!
“ஏன் ப்ரியா இப்படி பண்ணின..??”
“என்ன பண்ணினேன்..??”
ப்ரியா விஷயம் தெரிந்துகொண்டே முறைப்பாக கேட்டாள். ‘தன் காதலிக்கு சர்ட்டிஃபிகேட் கிடைக்காத ஆத்திரத்தில் சப்போர்ட்டுக்கு வந்திருக்கிறானா..??’ என்று இன்ஸ்டண்டாய் அசோக்கின் மீது அவளுக்கு ஒரு எரிச்சல்..!!
“அந்த லிஸ்ட்ல செண்பகம் பேரையும் ஆட் பண்ணிருக்கலாம்ல..?? அவளுக்கும் அந்த சர்ட்டிஃபிகேட் கெடைச்சிருக்கும்ல..??” அசோக்கின் கேள்விக்கு அவள் தயாராகத்தான் இருந்தாள்.
“ப்ச்.. ஃபர்ஸ்ட் ஃபேஸ் டெலிவரி முடிஞ்சப்புறந்தான் அவ டீமுக்குள்ளயே வந்தா.. அவளை எப்படி அந்த லிஸ்ட்ல சேக்குறது..?? அது தப்பு..!!”
“இந்த சின்ன விஷயத்துக்குலாமா ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் பார்ப்ப..?? இதுலாம்.. ஜஸ்ட்.. டீமுக்குள்ள ஒருத்தொருக்கொருத்தர் பண்ணிக்கிற சின்ன சின்ன ஹெல்ப்தான..?? டீம்ல எல்லாருக்கும் கெடைக்கிறப்போ.. அவளுக்கு மட்டும் இல்லைன்னா.. அது அவளுக்கு கஷ்டமா இருக்காதா..?? அந்த சர்டிஃபிகேட் வச்சு அவ பெருசா ஏதும் சாதிக்கப் போறது இல்ல.. ஆனா ஏதோ ஒரு வகைல அவ கேரீர்க்கு அது ஒரு அட்வாண்டேஜா இருந்திருக்கும்..!! அதை நீ ஸ்பாயில் பண்ணிட்ட..!!”
Comments