பருவத் திரு மலரே – 69
(Tamil Sex Story - Paruvathiru Malarae 69)
This story is part of a series:
ஆனால் பாக்யாவின் அம்மாவுக்குத் தெரியும் அவர்கள் சாந்தி வீட்டுக்கு போயிருக்க மாட்டார்கள் என்பது.
” புருஷன் கூட என்ன சண்டை.. ?” அப்பா கேட்டார்.
அப்பா போதையில் இருந்ததால் அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனாலும் அவர் பாட்டுக்கு ஏதேதோ பேச ஆரம்பித்து விட்டார். இப்போதும் அவளைப் பற்றின குறைகளைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். பாக்யாவின் அம்மா எழுந்து அவர்களை சாப்பிட அழைத்தாள்.. ! பரத் இன்னும் வீட்டுக்கு வந்திருக்கவில்லை. அப்பா பேசுவதை காதிலேயே வாங்கிக் கொள்ளாதவளைப் போல.. அம்மா வீட்டுக்குள் போய் ராசுவுடன் உட்கார்ந்து சாப்பிட்டாள்.. !! அவள் அப்பா வாசலில் உட்கார்ந்து கொண்டு ஏதேதோ உபதேசம் எல்லாம் செய்து கொண்டிருந்தார். கல்லானாலும் கணவனாம்.. புல்லானாலும் புருஷனாம்.. !!
” எங்கப்பன் சொல்றது எனக்கில்ல.. உனக்குத்தான். நல்லா கேட்டுக்கோ.. !” என்று அம்மாவிடம் சொல்லிச் சிரித்தாள்.
” எங்க சாமி போனிங்க. ??” அம்மா மெல்லக் கேட்டாள்.
” பேசிட்டிருந்தோம்க்கா.. !!” ராசு சொன்னான்.
” அவங்கப்பனுக்கு.. வீட்டுக்கு வரதுக்கு முன்னாலயே இவங்க போட்ட சண்டைய யாரோ சொல்லிட்டாங்க மாதிரி இருக்கு. வந்ததுல இருந்து.. ஒரே நச்சரிப்பு. !!”
” ஆனா இவ பண்ற அலும்பு ரொம்ப ஓவர்க்கா.. ”
” என்ன தம்பி பண்ணா.. ??”
” ஏ.. அதெல்லாம் சொல்லாதடா.. !” என்றாள் பாக்யா.
” எனக்கு வாழவே புடிக்கல.நான் சாகப் போறேனு சொல்லிட்டிருந்தா.. இவளை சமாதானப் படுத்தி கூட்டிட்டு வரதுக்குத்தான் இத்தனை நேரம்.. !!” என்றான் ராசு.
” யாரு.. இவ சாகப் போறவளா.. ? நம்மளை சாகடிக்காம இவ சாக மாட்டா.. ” என்றாள் அம்மா.
” உனக்கு இது தேவையா பையா. ? நான்லாம் செத்துட்டேனு நீ வந்து சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க.. !!” என்று சிரித்தாள் பாக்யா.
” இல்லக்கா.. நெஜம்தான். ! நீ அவருகிட்ட எதுவும் சொல்லிராத. ! தாலிய எல்லாம் கழட்டி போட்டுட்டு.. நான் வர மாட்டேன் நீ போன்னு அவ பாட்டுக்கு மலை ரோட்ல நடக்க ஆரம்பிச்சிட்டா..! மறுபடி அவளை சமாதானம் பண்ணி.. தாலிய கழுத்துல மாட்ட வச்சு கூட்டிட்டு வந்துருக்கேன்..!!”
அவள் அம்மாவுக்கு சுர்ரென கோபம் வந்து விட்டது. சாப்பிட்டுக் கொண்டிருந்த பாக்யாவின் கன்னத்தில் பளீரென ஒரு அறை விட்டாள்.!
” நீ எதுக்குடி சாகனும். ? அவன் வேண்டாம்னு முடிவு பண்ணா தூக்கி வீசிப் போட்டு வா..! நாங்க பாத்துக்கறோம். என்ன உங்கப்பன் மட்டும் கொஞ்ச நாளைக்கு கத்துவான்..! உனக்கு என்ன வயசாகிப் போச்சு இப்போ.. ? இன்னும் கல்யாண வயசே வரல..! மறுபடி இன்னொரு கல்யாணம் பண்ணி வெக்கறோம்.. !” என்று அவள் அப்பாவுக்கு கேட்காமல் அடிக் குரலில் சொன்னாள்.
சட்டென இரண்டு கைகளையும் கூப்பி அம்மாவைக் கும்பிட்டாள் பாக்யா.
” ஆத்தா.. தாயி. ! நீ என்னை அடி கொல்லு.. என்ன வேணா பண்ணிட்டு போ.! தயவு செய்து என்னை இன்னொரு கல்யாணம் மட்டும் பண்ணிக்கச் சொல்லாத.! அதுக்கு நான் செத்தாவது போயிருவேன்..!!”
” ஆமாண்டி.. நீ சாகறதுக்குத்தான் உன்னை இத்தனை தூரம் பெத்து வளத்திருக்கோம்..!!”
” விடுக்கா.. இனி நீ டென்ஷனாகாத. அவளை இப்போதைக்கு அவன் கூட அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழச் சொல்லிருக்கேன்.. ! பாக்கலாம்.. என்ன ஆகுதுனு.. !!” என்றான் ராசு.
தன் அம்மாவும்.. ராசுவும் அவளுக்கு ஆதரவாக இருப்பது.. மிகப் பெரிய பலமாகத் தோன்றியது பாக்யாவுக்கு..! அம்மா கூட இவ்வளவு சுலபமாக தனக்கு ஆதரவாக பேசுவாள் என்று அவள் நினைத்திருக்கவில்லை.. !! அவள் மனசு கரைந்து.. அவளையும் மீறி அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது …… !!!!!! Jatti Kalattum Tamil Sex Story
-வளரும் ….. !!!!!!
What did you think of this story??
Comments