இதயப் பூவும் இளமை வண்டும் – 107

(Idhayapoovum Ilamaivandum 107)

Raja 2015-08-19 Comments

This story is part of a series:

பொதுவாக.. நண்பர்களுடனான பேச்சு.. எப்போதும் அர்த்தமுள்ளதாகவே இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.
அதிலும் சரக்கடித்துவிட்டு பேசும்போது.. அப்படி எந்த ஒரு முகாந்திரமும் தெண்படாது.!
ஆனால் பேச்சு மட்டும் மணிக்கணக்கில் நீளும்..!!

அப்படி நடந்த பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை..!!
ஒண்ணு முப்பது மணிக்கு பார விட்டு வெளியேறினார்கள்..!
பாருக்கு எதிரிலேயே சினிமா தியேட்டர்..!

தியேட்டரில் பாகுபலி ஓடிக்கொண்டிருந்தது.!
காத்து பார்க்க வேண்டும் என வற்புறுத்தி அழைத்துப் போனான்..!!

அவர்கள் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்த.. சில நிமிடங்களிலேயே படம் துவங்கியது..!!

படத்தின் பிரம்மாண்டம் பற்றின தகவல்களை எல்லாம் நான் ஸ்டாப்பாகஙச் சொன்னான் காத்து.
சசிக்கு அதிகம் பேச வாய்ப்பே கொடுக்கவில்லை. காத்துதான் நிறைய பேசினான். !

‘பாவம்..வீட்டில் பேச சுதந்திரம் இல்லை ‘ போல என எண்ணிக்கொண்டான் சசி….!!

தியேட்டரில் உட்கார்ந்த அரைமணி நேரம் கழித்து சசிக்கு போன் வந்தது. !

குமுதா போன் செய்திருந்தாள்.
எடுத்து காதில் வைத்து பேசினான். !
தியேட்டர் சத்தத்தில் தெளிவாக எதுவும் கேட்கவில்லை..!
ஆனாலும் அரைகுறையிக அவள் சொன்னதைக் கேட்ட சசி.. அதிர்ந்து போனான்..!
”அப்பாக்கு… அட்டாக் வந்துருச்சுடா.. தோட்டத்துலருந்து ஆஸ்பத்ரி கொண்டு போறாங்க.. நீ வாடா.. எனக்கு பயமாருக்கு..!!” என போனிலேயே அழுதாள் குமுதா.

சசி உடனே.. விசயத்தைக் காத்துவிடம் சொல்ல… இருவரும் தியேட்டரை விட்டு உடனடியாக வெளியே வந்தனர்.!

சசி மீண்டும் குமுதாவுடன் பேசினான்.! அவனுடைய அப்பா போனுக்கு கூப்பிட… அவர்கள் தோட்டத்துக்குப் பக்கத்து தோட்டத்துக்காரர் பேசினார்.!
என்ன நிலவரம்..? எந்த ஆஸ்பத்ரி எனக் கேட்டு… அவன் ஆஸ்பத்ரி போனான்..!!

ஆஸ்பத்ரி வாசலில்.. காத்து பைக்கை நிறுத்த.. அவன் பின்னால் உட்கார்ந்திருந்த சசி இறங்கினான்.!
வராண்டாவில் தலைவிரி கோலமாக நின்றிருந்த.. சசியின் அம்மா… சசியைப் பார்த்ததும்.. நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினாள்..!!

அந்தக் கதறலிலேயே சசிக்கு எல்லாம் புரிந்து போனது….
அவனது கால்கள்.. தளர்ந்தது….!!

‘அப்பா.. இறந்து விட்டார்….!!!!’

-வளரும்……..!!!!!!!

காதைக்கு ஆதரவு காட்டும் அனைத்து நண்பர்களுக்கும்.. என் கனிவான.. வணக்கங்கள்….!!
என்னால் இயன்றவரை கதையை சீக்கிரம் கொடுக்கத்தான் முயற்சி செய்கிறேன்..!!
தொடர்ந்து உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் காட்டுவீர்கள் என்கிற நம்பிக்கையுடன்………

உங்கள்.. முகிலன்…….!!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top