♥ நீ -57♥(வாசகர் கதைகள்)
நீ சிரித்தாய். ”வேலையெல்லாம் புடிச்சிருக்குனு சொன்னாங்க..!!”
தீபா என் அருகில் வந்து நின்றாள்.
”ஜாலியா இருந்துச்சு..! ஒரு கஷ்டமும் இல்ல..” என்றாள்.
”ஏன் ஒருமாதிரி டல்லாருக்க..? தலையெல்லாம் கலஞ்சு..?” என்று அவள் தோளில் கை வைத்தேன்.
உதட்டைக் கோணி ”பசி..” என்றாள்.
”ஏன்.. மத்யாணம் சாப்பிடலியா..?”
”நல்லா சாப்பிட்டேன்..! ஆனாலும் பசிக்குது..!!” என்றாள்.
”சரி..இப்ப.. ஏதாவது சாப்படறியா..?”
”வாங்கிக்குடுத்தா.. வேண்டாம்னு சொல்ல மாட்டேன்..” என்று சிரித்தாள்.
”சரி.. நட..! என்ன சாப்பிடறே..?”
” ம்..ம். !!” யோசித்து ” பேல்பூரி… ஒரு காளான் ப்ரை..! இது போதும் ” என்றாள்.
உன்னைப பார்த்தேன் ”நீயும் வா.. தாமரை..”
”ஐயோ..! எனக்கு பசி இல்லீங்க..! அதும்போக கடைலயும் ஆள் இல்லீங்க..! இவளுக்கு வாங்கிக் குடுங்க..!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாய்.
”சரி..உனக்கு பார்சல் வாங்கித்தரேன் சாப்பிட்டுக்க..” என்று விட்டு தீபாவின் தோளில் தட்டினேன் ”வா.. கருவாச்சி..”
”இரு செங்கா… நான் திண்ணுட்டு.. உனக்கும் வாங்கிட்டு வந்தர்றேன்..!!” என்று விட்டு என்னுடன் வந்தாள் தீபா….!!!!!!
– சொல்லுவேன்….!!!!!!!
– ஏதாவது சொல்லுங்கப்பா…??
What did you think of this story??
Comments