ஆண்மை தவறேல் – 32
(Tamil Sex Stories - Aanmai Thavarael 32)
“ஐயோ.. விடுங்கப்பா.. ப்ளீஸ்..”
அசோக் பிடித்த பிடியை விடவில்லை. அவனுடைய வலுவான பிடியில் சிக்கியிருந்த, வாழைத்தண்டு போன்ற வழவழப்பான நந்தினியின் கையை, அப்படியே அவளுடைய பின்னுக்கு வளைத்து, அவளை தன்னை நோக்கி இழுத்தான். இப்போது நந்தினி அசோக்கிற்கு எதிரே, அவனுக்கு மிக நெருக்கமாக வந்து சேர்ந்தாள். அவளுடைய வலது கை பின்பக்கமாக வளைத்து பிடிக்கப்பட்டிருக்க, அவளது மார்புகள் ரெண்டும் அசோக்கின் நெஞ்சில் மெத்தென்று அழுந்தி, உரசிக்கொண்டிருந்தன.
அசோக் நந்தினியின் முகத்தை குறும்பாக பார்த்துக்கொண்டிருக்க, அவளோ அசோக்கின் முகத்தை வெறுப்பாகவே பார்த்தாள். இருவருடைய பார்வைகளும் ஒன்றோடொன்று மோதி சண்டையிட, அவர்கள் விட்ட அனல் மூச்சு ஒன்றோடொன்று மோதி ஒன்று கலந்தன. நந்தினியின் உதாசீனத்தால் வந்த கோபமும், அவள் மீதிருந்த ஆசையும் ஒன்று கலந்த மாதிரியாக அசோக் சொன்னான்.
“ரொம்ப திமிருடி உனக்கு..!!”
“ம்ம்..?? உங்களை விடவா..??” நந்தினி படக்கென சொன்னாள்.
“எனக்கு என்ன திமிரு.. நானா பேச வர்றப்போலாம் மூஞ்சை சிலுப்பிக்கிட்டு ஓடுறேன்..?? பாக்குறப்போலாம் ஏதோ அருவருப்பான பிராணியை பாக்குற மாதிரி பாக்குறேன்..??” அசோக் பற்களை கடித்தவாறு கேட்க,
“நீங்க செஞ்ச காரியத்துக்கு வேற என்ன பண்ணுவாங்களாம்..??” நந்தினியும் சூடாக திருப்பிக் கொடுத்தாள்.
“இங்க பாரு.. நான் வேணுன்னு அப்படி பண்ணல.. அது ஜஸ்ட் ஆக்சிடன்ட்… அதுக்கும் நீதான் காரணம்..!!”
“நானா..?? நான் என்ன பண்ணுனேன்..??” நந்தினி புருவத்தை சுருக்கியவாறே கேட்க, அசோக் இப்போது அவளது உதடுகளை வெறித்தவாறே கேலியான குரலில் சொன்னான்.
“ம்ம்ம்.. அழகான இந்த லிப்சை அவ்ளோ க்ளோசப்புல உன்னை யாரு காட்ட சொன்னா..?? அதுவும் ஜீராலாம் ஊத்தி..!! அதை பாத்து எனக்கு புத்தி பேதலிச்சு போச்சு.. கிஸ் பண்ணிட்டேன்..!!”
“ம்க்கும்.. பண்றதையும் பண்ணிட்டு பழியை என் மேல தூக்கி போடுறீங்களா..??”
“உன் மேலலாம் எதையும் தூக்கி போடலை.. உன்கிட்ட கொஞ்சம் அதை பத்தி பேசணும்னு சொல்றேன்..!!”
“பேசுங்க.. யாரு வேணான்னா..? எது பேசுறதா இருந்தாலும்.. மொதல்ல என் கையை விட்டுட்டு பேசுங்க..!!”
“நீதான் பேச வர்றப்போலாம்.. வெடுக்குனு கடிச்சு வச்சுட்டு ஓடுறியே..?? அதான்.. இன்னைக்கு உன்னை இப்படியே புடிச்சு வச்சுக்கிட்டு.. நான் சொல்ல நெனச்சதெல்லாம் சொல்லிட போறேன்..!!”
“ப்ச்.. கை வலிக்குது அசோக்.. விடுங்க.. ப்ளீஸ்..!!”
“ம்ஹூம்..!! நீ ஓடிடுவ..!!”
“இல்ல.. ஓடலை.. கையை விடுங்க..!! ப்ளீஸ்..!!”
நந்தினி கெஞ்சலாக சொல்ல, அசோக் மெல்ல தன் பிடியை தளர்த்தினான். அவளுடைய கையை விடுவித்துவிட்டு, அவளது கண்களையே கூர்மையாக பார்த்தான். அவ்வளவு நேரம் பின்புறமாக வளைக்கப்பட்டிருந்த அவளது கையை, நந்தினி முன்பக்கமாக கொண்டு வந்தாள். அவனுடைய வலுவான பிடியில் சிக்கி, வலியெடுக்க ஆரம்பித்திருந்த வலது கையை, இன்னொரு கையால் மெல்லமாய் மசாஜ் செய்து கொடுத்தாள். கணவனை ஏறிட்டு சற்றே இறுக்கம் தளர்ந்த குரலில் சொன்னாள்.
“சொ..சொல்லுங்க.. என்ன விஷயம்..?”
“நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கோவப்படாம கேக்கணும்..”
“கேக்குறேன்.. சொல்லுங்க..”
அசோக் இப்போது சற்று நிதானித்தான். நந்தினியின் முகத்தையே சில வினாடிகள் அமைதியாக பார்த்தவன், அப்புறம் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவாறே ஆரம்பித்தான்.
“அன்னைக்கு .. மொட்டை மாடில.. நான் ஏன் அப்படி பண்ணினேன்னு எனக்கே தெரியலை நந்தினி..!!”
“அதான் தெள்ளத்தெளிவா அன்னைக்கு ஒரு காரணம் சொன்னீங்களே..?”
“இல்ல.. அ..அது.. நான் ஒரு கப்ஃயூஷன்ல அப்படி சொல்லிட்டேன்..!!”
“ஓ..”
“ஆக்சுவலா.. ரெண்டு வாரமா.. அதையேதான் என் மனசுல போட்டு கொழப்பிட்டு இருக்கேன்..!! உன்கிட்ட அதைப் பத்தி பேசணும்னு நெனச்சப்போலாம்.. நீ வீம்பு பண்ணிட்டு ஓடிட்ட..!!”
“அதான் இப்போ கேக்குறேனே.. சொல்லுங்க..!!”
“ம்ம்ம்.. நேத்து நைட்டு கார்ல வீட்டுக்கு வந்துட்டு இருக்குறப்போ.. உன்..”
அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பாக்கெட்டில் கிடந்த அவனுடைய செல்போன் ‘விர்ர்ர்ர்… விர்ர்ர்ர்…’ என்று பதறியது. அவன் பேச்சை நிறுத்திவிட்டு பாக்கெட்டுக்குள் கைவிட்டு செல்போனை எடுத்துப் பார்த்தான். ‘கற்பு காலிங்..!!’ என்றது டிஸ்ப்ளே..!!
“ஒரு நிமிஷம் நந்தினி..” என்று நந்தினியிடம் சொன்னவன், காலை பிக்கப் செய்து,
“ஹாய் கற்பு.. குட்மார்னிங்..!!” என்றான் உற்சாகமாய்.
“குட்மார்னிங் டா..!!”
அடுத்த முனையில் கற்பகம் என்று தெரிந்ததுமே நந்தினியிடம் ஒரு வித எரிச்சல். ‘ப்ச்..’ என்று சலிப்பாக சொன்னவாறு முகத்தை வேறுபக்கமாக திருப்பிக் கொண்டாள். அதைக் கவனியாத அசோக் செல்போனில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
“என்னாச்சு கற்பு.. காலங்காத்தால கால் பண்ணிருக்குற..?”
“சொல்றேன்.. நீ இப்போ எங்க இருக்குற..? ஆபீஸுக்கு கெளம்பிட்டியா..??”
“இன்னும் இல்ல.. ஏன்..?”
“போற வழில என்னை கொஞ்சம் பிக்கப் பண்ணிக்க முடியுமா..?” கற்பகம் கெஞ்சலாக கேட்க,
“ம்ஹூம்.. என்னால முடியாதுப்பா..!!” அசோக் குறும்பாக மறுத்தான்.
“ஹேய்.. ப்ளீஸ்டா.. ரொம்ப லேட்டாகிப்போச்சு..!!”
“ஏன்..?? என்னாச்சு..??”
“ம்ம்.. இப்போத்தான் எந்திரிச்சேன்.. மூஞ்சில வெயில் அடிக்கிறது கூட தெரியாம இவ்வளவு நேரம் நல்லா தூங்கிருக்கேன்..!!”
“ஹாஹா..!! அடிப்பாவி.. ஒரு கல்யாணம் ஆன குடும்பப்பொண்ணு பேசுற மாதிரியா பேசுற..??”
அசோக் கற்பகத்திடம் சிரிப்பாக சொல்ல, நந்தினி இப்போது அசோக்கின் முகத்தை ஏறிட்டு வெறுப்பாக முறைத்தாள். அசோக் பேசியதை மட்டும் வைத்துக்கொண்டு, அடுத்த முனையில் கற்பகம் என்ன பேசியிருப்பாள் என்று இவளாகவே கற்பனை செய்துகொண்டாள். கற்பகத்தின் மீது ஏற்கனவே சந்தேகத்தில் இருக்கும் நந்தினியின் கற்பனை, எந்தமாதிரி இருந்திருக்கும் என்று நீங்களாகவே கற்பனை செய்து கொள்ளுங்கள். இவளுடைய கொதிப்பை அறியாத இருவரும், இயல்பாக தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
“என்னடா பண்றது.?? என்னைக்கும் அவர்தான் எழுப்பி விடுவாரு.. இன்னைக்கு அவர் வேற இல்லையா.. நல்லா தூங்கிட்டேன்..!!”
“ஓ.. உன் புருஷன் ஊர்ல இல்லையா..??” – நந்தினி இப்போது அசோக்கை எரித்துவிடுவது போல பார்த்தாள்.
“இல்லடா.. வெளியூர் போயிருக்காரு..!!”
“ம்ம்ம்.. ஓகே கற்பு.. நான் இப்போ இங்க இருந்து கெளம்பிடுவேன்..!!”
“கொஞ்சம் பொறுமையாவே வாடா.. நான் இப்போதான் குளிக்கவே போறேன்..!!”
“சரி சரி.. குளிச்சுட்டு ரெடியா இரு.. பிஃப்டீன் மினிட்ஸ்தான் உனக்கு டைம்..!!”
அசோக் பேசிக்கொண்டிருக்க, நந்தினி இப்போது பொறுமை இழந்தாள். அவன் கற்பகத்திடம் பேசிய வார்த்தைகள் எல்லாம் நந்தினியின் சந்தேகத்துக்கு தூபம் போடுவதாகவே இருந்தன. அவ்வளவு நேரம் அவனையே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தவள், இப்போது ‘ச்சை.. இது திருந்தாத கேஸு..!!’ என்று மனதுக்குள்ளேயே அசோக்கை திட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள். அசோக்கோ நந்தினி சென்றதை கவனியாது, மறுமுனையில் கற்பகம் பேசியதற்கு காது கொடுத்திருந்தான்.
“ஹேய்.. கொஞ்சம் முன்னபின்ன ஆனாலும்.. பஸ் ஸ்டாப்லயே வெயிட் பண்ணுடா.. விட்டுட்டு போய் கழுத்தறுத்துடாத..!!”
“ஹாஹா..!! ஓகே.. வெயிட் பண்ணுறேன்.. ஆனா ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுடாத..!!”
“இல்ல இல்ல.. சீக்கிரம் வந்துடுவேன்..!!”
“சரி கற்பு.. வா.. வெயிட் பண்ணுறேன்..!!”
“ரொம்ப தேங்க்ஸ்டா..!!”
“இட்ஸ் ஓகே கற்பு.. நீ கெளம்பு.. பை..!!”
காலை கட் செய்துவிட்டு திரும்பிய அசோக், நந்தினியை அங்கே காணாமல் ஒருகணம் திகைத்தான். அப்புறம் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். ‘எங்கே போய் விட்டாள்..?’ என்று மனதில் கேள்வியுடன், ஹால் கிச்சன் எல்லாம் சென்று தேடிப்பார்த்தான். நந்தினியை எங்கும் காணவில்லை. இப்போது அசோக்கிடம் ஒரு எரிச்சல் வந்து தொற்றிக் கொண்டது.
‘ச்சே.. என்ன இவள்..?? என்ன நினைத்திருக்கிறாள் இவள் மனதில்..?? இப்படி என்னை உதாசீனம் செய்கிறாளே..?? மனம் விட்டு பேச நினைப்பதை காது கொடுத்து கேட்க கூட மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்..?? இவளுடைய தங்கை இவளைப் பற்றி சொன்னது எல்லாம் உண்மைதானா..?? உள்ளத்தில் என்மீது காதலில் இருப்பவள் இப்படி எல்லாம் செய்வாளா..?? இல்லை இல்லை.. இவளுக்கு என் மீது காதலும் இல்லை.. ஒரு மண்ணும் இல்லை..!! நெஞ்சு நிறைய வெறுப்புத்தான் இருக்கிறது..!! ச்சே..!!!’
அசோக் கடும் எரிச்சலுடன் ஆபீஸுக்கு கிளம்பி சென்றான். அவன் அவளை வீட்டுக்குள் தேடிக்கொண்டிருக்கிற நேரத்தில், நந்தினி பால்கனிக்கு சென்று, தனிமையில் நின்று, கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் என்பது அவனுக்கு தெரியாது. Mulai Urasum Tamil Sex Stories
– தொடரும்
What did you think of this story??
Comments