ஆண்மை தவறேல் – 30
(Tamil Hot Stories - Aanmai Thavarael 30)
அசோக்கோ வேறு மாதிரியான மனநிலையில் சிக்கி தவித்தான். நந்தினியின் சோகம் அவனையும் சேர்த்து வாட்டியது. அவளுடைய வாடிப்போன முகத்தை கண்டபோதெல்லாம் அவனும் மனம் வாடினான். அவனை எப்போதும் ஒருவித குறும்புடனே பார்க்கும் அவளுடைய கண்கள், இப்போது வெறுப்பை வீசியதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கனிவும் கலகலப்புமான அவளுடைய பேச்சு, மீண்டும் ஒலிக்காதா என அவன் காதுகள் ஏக்கம் கொண்டன. எல்லாவற்றிற்கும் காரணம் தனது அவசர புத்திதான் என்று முதலில் அவனுக்கு தோன்றியது.
‘அவள் என்னை காதலிக்கிறாள் என்ற சந்தேகம் ஏற்கனவே எனக்கு இருந்தது. அப்படி இருக்க.. அந்த முத்தம் அவளுக்குள் எந்த மாதிரியான கனவுகளை கொடுத்திருக்கும் என்று நான் எண்ணியிருக்க வேண்டாமா..? அது காதல் இல்லை வெறும் காமம் என்று வெடுக்கென சொன்னால்.. அவள் எந்த மாதிரியான வேதனையில் வெந்து போவாள் என்று ஏன் நான் சிந்திக்கவில்லை..? அவசரப்பட்டிருக்க வேண்டாமோ..? பொறுமையாக அவளுக்கு எடுத்துரைத்திருக்க வேண்டுமோ..?’
‘ஆமாம்.. அதை எப்படி பொறுமையாக எடுத்துரைப்பது..? பொறுமையாக சொன்னால் மட்டும் அவளுக்கு என்ன குளுகுளுவென்றா இருக்கப் போகிறது..? செருப்பால் அறைவது மாதிரியான சேதி அது.. வலது கால் செருப்பாய் இருந்தால் என்ன.. இடது கால் செருப்பாய் இருந்தால் என்ன.. வலியில் ஏதும் வித்தியாசம் இருக்கப் போவதில்லை..!! முதலில் அந்த விஷயத்தையே ஏன் அவளிடம் சொன்னாய்..? ஏன் அவளுடைய கனவுகளை பொசுக்கி கண்ணீர் சிந்தவிட்டாய்..?’
‘சொல்லாமல் என்ன செய்வது..? உண்மையை சொல்லாமல் காலம் தாழ்த்துவது தவறில்லையா..? ஏதோ ஒரு விபத்து மாதிரி.. என்னையும் அறியாமல் அப்படி ஒரு காரியம் செய்துவிட்டேன்.. நான் செய்த அந்த காரியத்தால் அவளும் சந்தோஷத்தில் மிதக்க ஆரம்பித்து விட்டாள்.. ஆனால் அவள் அனுபவித்தது போலி சந்தோஷம் அல்லவா..? அந்த சந்தோஷம் போலி என்று சுட்டிக் காட்டுவதை தவிர வேறென்ன செய்வது..? காதல் என்று அவள் தவறாக எண்ணியிருப்பதை காமம் என்று தெளிவு படுத்துவது எனது கடமை அல்லவா..?’
‘இரு இரு.. முதலில் உனக்கு அந்த தெளிவு இருக்கிறதா..?? நீ அவளை முத்தமிட்டதன் காரணம் வெறும் காமம் மட்டுந்தானா..?? அதில் காதல் ஒளிந்திருப்பதாக உனக்கு தோன்றவில்லையா..?? உன்னுடைய அந்த முத்தத்தில் காதலை உணர்ந்ததாக அவள் சொன்னாளே.. அது ஏன் நிஜமாக இருக்க கூடாது..?? நீயும் கூட அவளை முத்தமிடும் தருணத்தில் தெளிந்த மனநிலையுடன்தானே இருந்தாய்..?? அந்த முத்தத்தின் பின்னணியில் இருப்பது.. நீண்ட நாளாய் உள்ளுக்குள் புதைந்திருந்த காதலா.. இல்லை.. அன்றொரு நாள் திடீரென பூத்த காமமா..??’
அசோக்கின் மனசாட்சி அப்படி ஒரு கேள்வி கேட்டதுமே, அவனது சிந்தனை ஓட்டம் சீராக இருக்காது. குழப்பத்துக்குள் ஆழ்ந்துவிடுவான். ‘நந்தினிக்கு ஏற்படுத்திய வலி எனக்கும் வேதனை அளிக்கிறது.. அவளுடைய கள்ளம் கபடமற்ற சிரிப்பு, மீண்டும் அவள் முகம் ஏறாதா என நானும் ஏங்குகிறேன்.. அவள் எப்போதும் போல என்னை பார்க்க மாட்டாளா.. பேச மாட்டாளா.. பழக மாட்டாளா.. என என் மனம் தவியாய் தவிக்கிறது.. அப்படியானால் அவள் மீது எனக்கு இருப்பது காதல்தானோ..??’
‘இல்லை.. என் வாழ்வில் இனி காதலே கிடையாது என்று.. என் மனதை சுற்றி ஒரு கோட்டை எழுப்பி வைத்திருக்கிறேனே.. அதையும் மீறி காதல் எப்படி உட்புகும்..?? அவள் மீது காதலிருந்தால் ‘நான் உனக்கு நல்ல மனைவியாக இருக்கிறேன்.. நீ எனக்கு நல்ல கணவனாக இருக்கிறாயா..?’ என்று அவள் உருக்கமாக கேட்டபோது, என் மனம் ஏன் மகிழ்ந்து போகவில்லை..?? முத்தமிட்டதை கூட காதல் என்று கொள்ளலாம்.. அதன்பிறகு செய்த இன்னொரு காரியத்தை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது..?? அப்படியானால் அவள் மீது எனக்கு இருப்பது காதல் இல்லையோ..??’
இப்படி குறுக்கும் மறுக்குமாய் சிந்திக்க சிந்திக்க, அசோக்கிற்கு ஒரு குழப்ப குவியல்தான் மிஞ்சும். அவன் மனதில் தெளிவில்லை என்பது அவனுக்கே புரிந்து போனது. நந்தினியிடம் மனம் விட்டு பேசி, தனது குழப்பத்தை எடுத்துரைக்கலாமா என்று யோசித்தான். அவள் இதற்கு எதுவும் தீர்வு வைத்திருக்கிறாளா பார்க்கலாம் என்று தோன்றியது.
ஒருநாள் இரவு.. அவர்கள் அறையில்.. தூங்க செல்லும் வேளையில்.. அவள் தரையில் படுத்துக் கொண்டு அந்தப் பக்கமாக திரும்பிக் கொள்கையில்.. அவளுடைய முதுகை பார்த்தபடியே.. மெல்ல ஆரம்பித்தான்..!!
“ந..நந்தினி..”
“ம்ம்ம்..” அவள் திரும்பாமலே சப்தம் எழுப்பினாள்.
“உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..”
“எதைப் பத்தி..?”
“அ..அதான்.. அன்னைக்கு மொட்டை மாடில..” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
“ஏன்.. இன்னும் என்னை ஏதாவது குத்தி கிழிக்க வேண்டியது பாக்கி இருக்கா..??” நந்தினி வெடுக்கென கேட்டாள்.
“ச்சேச்சே.. அப்டி இல்ல..”
“அப்புறம்..?? அந்த அசிங்கத்தை மறக்க நெனைக்கிறேன்.. விட மாட்டீங்களா..??”
அவள் அந்த மாதிரி சூடாக கேட்கவும், அசோக்கிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ‘இப்படி முகம் கொடுத்து கூட பேச மாட்டேன் என்கிறாளே..? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதையே சொல்லிக்காட்டி என்னை நோகடிக்கிறாளே..? இவளுக்கு எப்படி பேசி புரிய வைப்பது..?’
அசோக் தலையை பிடித்துக் கொண்டான். கொஞ்ச நேரம் அவளுடைய முதுகையே வெறித்துப் பார்த்துவிட்டு, அப்புறம் அவனும் அமைதியாக அவளுக்கு முதுகு காட்டி, திரும்பி படுத்துக் கொண்டான்.
“சரி.. சொல்லுங்க.. என்ன..?” என்றாள் நந்தினி, ஒரு இரண்டு நிமிடங்கள் கழித்து வெறுப்பாக.
“ஒண்ணுல்ல விடு..” என்றான் அசோக்கும் வீராப்பாக.
அவர்களுக்கு இடையில் விழுந்த இந்த விரிசலை வீட்டில் இருந்த மற்றவர்களும் கவனிக்க தவறவில்லை. இறுகிப்போன முகத்துடன் அவர்கள் திரிந்தது, கௌரம்மாவையும், மஹாதேவனையும் கவலை கொள்ள செய்தது. ஓரிரு நாட்கள் பொறுத்துப் பார்த்த மஹாதேவன் மகனிடமே கேட்டுவிட்டார்.
“என்னடா ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்..?”
“யாரு ரெண்டு பேருக்கும்..?” அசோக் புரியாத மாதிரி நடித்தான்.
“உனக்கும் உன் பொண்டாட்டிக்கும்..”
“எ..எங்களுக்கு என்னாச்சு.. ஒன்னுல்லையே..?”
“இல்ல.. ஏதோ சரியில்ல.. உங்களுக்குள்ள எதுவும் பிரச்னையா..?”
“அதெல்லாம் ஒண்ணுல்ல டாட்..”
“பொய் சொல்லாத அசோக்.. உங்களுக்குள்ள ஏதோ பிரச்னைன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.. என்ன விஷயம்னு மறைக்காம என்கிட்டே சொல்லு..” அவர் துருவி துருவி கேட்கவும், அசோக் எரிச்சலானான்.
“புருஷன் பொண்டாட்டின்னா ஏதாவது பிரச்னை வந்துட்டுத்தான் இருக்கும்.. எல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா..? இதுக்குத்தான் எனக்கு கல்யாணமே வேணாம்னு சொன்னேன்.. நீங்கதான் கட்டாயப்படுத்தி பண்ணி வச்சீங்க.. இப்போ நான் கெடந்து கஷ்டப்படுறேன்..!!”
என்று தந்தை மீது பாய்ந்தான். நந்தினி மீதிருந்த எரிச்சலையும், கோபத்தையும் மஹாதேவனிடம் காட்டினான். அவனுடைய சீற்றத்தில் மஹாதேவன் வாயடைத்து போனார். அப்புறம்.. கணவன், மனைவிக்கு இடையிலான உள்விவகாரத்தில், தான் தலையிடாமல் சற்று ஒதுங்கி இருப்பதே நல்லது என்று தோன்றவும், மேற்கொண்டு அவனை கேள்வி கேளாமல் அமைதியாக திரும்பி நடந்தார். Pundai Nakkum Tamil Hot Stories
– தொடரும்
What did you think of this story??
Comments