ஆண்மை தவறேல் – 30
(Tamil Hot Stories - Aanmai Thavarael 30)
Tamil Hot Stories – “நேத்து நைட்டு நான் மேட்ச் பாக்க போகலை.. ஒரு பொண்ணை கூட்டிட்டு கெஸ்ட் ஹவுஸ் போயிருந்தேன்.. லாஸ்ட் மொமன்ட்ல அந்தப்பொண்ணை திருப்பி அனுப்ப வேண்டியாகி போயிடுச்சு..!! ஆனா.. எனக்கு உள்ள இருந்த அந்த செக்ஸுவல் தர்ஸ்ட்.. அது அப்படியேதான் இருந்தது..!! அதோட வீட்டுக்கு வந்து.. உன்னை பாத்ததும்.. என்னையும் அறியாம அந்த செக்ஸுவல் தர்ஸ்ட் வெளிப்பட்டு.. உன்னை கிஸ் பண்ணிட்டேன்..!! சத்தியமா இது நான் ப்ளான் பண்ணி பண்ணலை.. இட் ஜஸ்ட் ஹேப்பன்ட்… லைக் அன் ஆக்ஸிடன்ட்..!! ப்ளீஸ் நந்தினி.. அதை நேத்தோட அப்படியே மறந்திடலாம்.. ஒரு கெட்ட கனவு மாதிரி நெனச்சுக்கோ..!! சரியா..??”
அசோக் சொல்லி முடிக்க, நந்தினி அப்படியே சப்த நாடியும் ஒடுங்கிப் போனவளாய் நின்றிருந்தாள். அவன் சொன்ன விஷயத்தை இன்னுமே நம்பமுடியாதவளாய் அவனையே பரிதாபமாக பார்த்தாள். அவனது நேற்றைய செய்கைக்கு காதல் என்று அர்த்தம் கற்பித்த தனது அறியாமையை எண்ணி அவளுக்குள் ஒரு சுய பச்சாதாபம். அந்த அறியாமையினால் காலையில் இருந்து அவனிடம் வெக்கங்கெட்டதனமாய் நடந்துகொண்டதை எண்ணி ஒரு வேதனை வேறு அவளை வாட்டியது. சோர்ந்து போனவளாய் அப்படியே மெத்தையில் பொத்தென்று அமர்ந்தாள்.
கொஞ்ச நேரம் அப்படியே தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தாள். அவளுடைய மனதுக்குள் ஒரு உணர்ச்சிக்கொந்தளிப்பு..!!! அப்புறம் தனது முகத்தை மெல்ல நிமிர்த்தி அசோக்கை ஏறிட்டாள். அவளுடைய கண்களில் இப்போது பொலபொலவென கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அழுகிற விழிகளுடனே இறுக்கமான குரலில் கேட்டாள்.
“அப்போ.. என்னை கிஸ் பண்ணினது.. என் மேல இருக்குற லவ்னால இல்ல..?”
“இ..இல்ல..!!”
“உங்க செக்ஸ் ஆசையை கட்டுப்படுத்த முடியாம.. அதை என்மேல வந்து கொட்டிட்டீங்க..?” நந்தினியின் கேள்வியில் இருந்த உக்கிரத்தில் அசோக் திகைத்தான்.
“ந..நந்தினி.. நான் சொல்றதை கொஞ்சம்..” அவன் தடுமாற்றமாய் சொல்ல, நந்தினி இப்போது சீறினாள்.
“பேசாதீங்க..!!!! போச்சு.. எல்லாம் போச்சு..!! என் புருஷனுக்கு என் மேல லவ் வந்துடுச்சுன்னு நம்பினேன்.. அந்த நம்பிக்கை போச்சு..!! எனக்கு இனிமே லைஃப்ல எந்தக்குறையுமே இல்லன்னு சந்தோஷப்பட்டேன்.. அந்த சந்தோஷம் போச்சு..!! எல்லாம் போச்சு..!!” என்று புலம்பினாள்.
“நந்தினி ப்ளீஸ்.. சொல்றதை கேளு..!! இ..இது.. இது ஒண்ணுல்ல.. இப்படி நீ பொலம்புற அளவுக்கு.. இப்போ பெருசா எதுவும் ஆயிடலை..??”
“ஓ..!! நடந்தது உங்களுக்கு ஒரு பெரிய விஷயமாவே தோணலைல..?? இது.. ஜஸ்ட் லைக் தட்.. அப்படியா..?? ஆமாம்.. உங்களுக்கு எப்படி அது பெரிய விஷயமா தோணும்..?? டெயிலி ஒருத்தி கூட படுத்து எந்திரிக்கிறவருதான நீங்க..?? உங்களுக்கு இதுலாம் சாதாரணம்தான்..!! சொல்லுங்க.. எத்தனை பேரை இந்த மாதிரி புடிச்சிருக்கீங்க.. ம்ம்ம்..?? நான் எத்தனாவது அந்த லிஸ்ட்ல..?? டபுள் டிஜிட்டா.. ட்ரிபிள் டிஜிட்டா..??” நந்தினி வெடித்து சிதற, அசோக் மிரண்டு போனான்.
“ந..நந்தினி ப்ளீஸ்..” என்றான் கெஞ்சலாக.
நந்தினி அவனுடைய கெஞ்சலை பொருட்படுத்தவில்லை. திடீரென படுக்கையில் இருந்து எழுந்தாள். அந்த அறைக்குள்ளேயே அவளுடைய பொருட்கள் எல்லாம் அடுக்கி வைத்திருக்கும் அலமாரியை நோக்கி சென்றாள். அந்த பொருட்களை எல்லாம் கலைத்து இழுத்து போட்டாள். எதையோ தேடினாள். எதுவுமே புரியாத அசோக் அவளை நெருங்கினான். கவலை தோய்ந்த குரலில் கேட்டான்.
“ந..நந்தினி.. நந்தினி என்ன பண்ற..?”
அவள் அவனுடைய அழைப்பை கண்டுகொள்ளவில்லை. ஒரு அரை நிமிடம் செலவழித்து அவள் தேடியதை கைப்பற்றினாள். கையில் எடுத்ததை அசோக்கின் முகத்தில் விட்டெறிந்தாள். ‘அது என்ன..?’ என்று பார்த்த அசோக் ஒருகணம் குழம்பிப் போனான். அது.. நந்தினியின் புகைப்படம்..!!
“ஏய்.. எ..என்ன இது..??”
“என் ஃபோட்டோ..!!”
“இ..இது எதுக்கு..??”
“என் உடம்பையும் அனுபவிச்சுட்டு.. உங்க ஆல்பத்துல இந்த ஃபோட்டோவையும் சேர்த்துக்கங்க..”
நந்தினியின் வார்த்தைகள் அசோக்கின் மீது சாட்டை சொடுக்கின. அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய வலியில் துடித்துப் போனான். அதே நேரம் அந்த வார்த்தைகள் அவனுக்குள் ஆத்திரத்தையும் கிளப்பி விட்டன. உடனே குரலை உயர்த்தி கத்தினான்.
“அப்படியே அறைஞ்சிருவேன் நந்தினி.. என்ன பேச்சு பேசுற..??”
“ஏன்.. நான் பேசுனதுல என்ன தப்பு..?? அவளுககிட்ட காட்டவேண்டிய ஆசையைத்தான.. தவறிப்போய் எங்கிட்ட காட்டிருக்கீங்க..?? அந்த ஆல்பத்துல இருக்குறவளுக மாதிரித்தான என்னையும் நெனச்சிருக்கீங்க..?? அப்புறம் என்ன.. இன்னைக்கே என் மேட்டரையும் முடிச்சுட்டு.. என் ஃபோட்டோவையும் சேத்துக்கங்க..!!” நந்தினி சீற, அசோக் தலையை பிடித்துக் கொண்டான்.
“ப்ளீஸ் நந்தினி.. அப்டிலாம் பேசாத.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!! எனக்கு அவளுகளும் நீயும் ஒன்னு இல்ல.. இது சத்தியம்..!!” கெஞ்சுகிற குரலில் சொன்னான்.
“அப்போ நான் யாரு..?? சொல்லுங்க.. நான் யாரு..??? பொண்டாட்டி இல்லைன்னு எப்போவோ சொல்லிட்டீங்க..!! இத்தனை நாளா ஃப்ரண்டுன்னு சொல்லிட்டு இருந்தீங்க.. ஃப்ரண்டை எவனும் இங்க புடிச்சு கசக்க மாட்டான்..!! பொண்டாட்டியும் இல்ல.. ஃப்ரண்டும் இல்லன்னா.. அப்புறம் நான் யாரு..??? அந்த மாதிரி பொண்ணுதான..???” நந்தினி வெடித்து சிதறினாள்.
“ப்ளீஸ் நந்தினி.. அப்படி சொல்லாத..”
“ஆமாம்.. அப்படி கூட சொல்லக்கூடாது..!! அட்லீஸ்ட் அந்த பொண்ணுகளுக்காவது.. இவன் தொடுறது லவ்னால இல்லன்னு முன்னாடியே தெரியும்.. எனக்கு அது கூட தெரியலையே..?? நீங்க என்ன நெனைப்புல என்னை தொட்டீங்கன்னு கூட புரியாத முட்டாளா இருந்திருக்கேனே..?? அந்தப் பொண்ணுகளை விட கேவலமானவ நான்..!!”
சொல்லிவிட்டு நந்தினி அப்படியே தரையில் அமர்ந்தாள். குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். அசோக் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான். என்ன செய்வதென்றே புரியாமல் செயலாற்றுப் போய் நின்றிருந்தான். நந்தினி அந்த மாதிரி உடைந்து போய் அழுவது, அவனுக்கு இதயத்தில் ஊசி செருகியது போலிருந்தது. மெல்ல நடந்து சென்று அவளை நெருங்கினான்.
“அழாத நந்தினி.. ப்ளீஸ்..” என்றவாறே அவளுடைய தோளை தொட்டான்.
“ச்சீய்.. கையை எடுங்க.. எனக்கு அப்படியே அருவருப்பா இருக்கு..!!”
என்று நந்தினி அவனுடைய கையை பட்டென தட்டிவிட்டாள். அவளுடைய செய்கை தந்த வேதனையில் அசோக் துடித்துப் போனான்.
அத்தியாயம் 23
அடுத்து வந்த சில நாட்களில்.. நந்தினியும் சந்தோஷமாக இல்லை.. அசோக்கும் நிம்மதியாக இல்லை..!! ஒவ்வொரு நாள் பொழுதும் அவர்களுக்கு ஒரு போராட்டமாகவே கழிந்தது..!!
நந்தினி ஒரு மாதிரி விரக்தியின் உச்சத்தில் இருந்தாள். எதிலுமே பிடித்தம் இல்லாமல் எந்திரம் போலவே நடந்து கொண்டாள். அசோக்குடைய செயலை எண்ணி எண்ணி தினமும் அகத்துக்குள் குமைந்தாள். அவனை மாற்றிவிடலாம் என தான் நம்பியதை நினைத்து, ‘பைத்தியக்காரி..’ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். அவனுக்கு தன் மீது காதல் வந்துவிட்டது என்ற எண்ணத்தில், தன் கால்கள் தரையில் நில்லாமல் மிதந்ததை நினைத்து, ‘வெக்கங்கெட்டவ’ என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள்.
அவளுடைய பார்வைக்கு, அவளது எதிர்காலமே இப்போது ஒரு சூனியமாக காட்சியளித்தது. ‘இவனுடனான என் வாழ்க்கை, என்னை எங்கே கொண்டு சேர்க்கும்..?’ என்று அவள் அடிக்கடி எழுப்பிய கேள்விக்கு, அவளுடைய புத்தியால் தெளிவான பதில் சொல்லவே முடியவில்லை. ‘காதலித்து வேறு தொலைத்து விட்டேன்.. இனி கண்ணீர் மட்டுந்தான் மிச்சம் போலிருக்கிறது..’ என்றே அவளுக்கு தோன்றியது.
விரக்தியில் இருந்தாலும் அசோக்கிற்காக அன்றாடம் செய்கிற வேலைகளில் இருந்து அவள் விலகிவிடவில்லை. எப்போதும் போலவே.. காலையில் அவனை துயில் எழுப்புவாள்.. ஆனால் அவள் பார்வையில் காதல் இருக்காது..!! காபி கலந்து அவனிடம் நீட்டுவாள்.. அதில் ஒரு கனிவு இருக்காது..!! உணவு சமைப்பாள்.. அள்ளிக்கொண்டு ஆபீசுக்கு செல்வாள்.. உடனிருந்து பரிமாறுவாள்.. ஆனால் அவள் உள்ளத்தில் பரிவு இருக்காது..!! அசோக் மீது அவளுக்கிருந்த அன்பும் அக்கறையும் இப்போது நமத்துப் போயிருந்தன..!!
சிலநேரங்களில் ‘இப்படியே இருந்துவிட்டு போய் விடலாமே..’ என்று கூட அவளுக்கு தோன்றும். விரக்தியில் உழன்றவள் அதிலேயே ஒரு சுகம் காண ஆரம்பித்திருந்தாள். ‘இவனுடன் திருமணம் என்றதும்.. ஆரம்பத்தில் இந்த மாதிரியான ஒரு வாழ்க்கையைத்தானே நான் எதிர்பார்த்திருந்தேன்..? இடையில் வந்ததுதானே இவன் மீதான காதல், இனிமையான வாழ்க்கை என்ற நம்பிக்கை எல்லாம்..? அந்த காதலையும் நம்பிக்கையையும் கனவென எண்ணி மறந்தால் என்ன..? எப்படியோ போய் தொலைகிறான் எனக்கென்ன என்றே இருந்தால் என்ன..?’
இந்த மாதிரி ஒரு விரக்தியான, விட்டேத்தியான மனோபாவத்துடன்தான் அந்த சில நாட்களில் அசோக்கை அவள் அணுக முயன்றாள்.
Comments