அன்புள்ள ராட்சசி – பகுதி 43

Raja 2013-09-01 Comments

அசோக்கின் கையைப்பற்றி அவனை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு சாலமன் கிளம்ப.. மனோகர் ‘படார்ர்…’ என கதவை அறைந்து சாத்தினான்..!! அவசரமாய் திரும்பி நடந்து அடுத்த அறைக்கு சென்றான்..!! கவலையும், பரபரப்பும் தொற்றிக்கொண்டவளாய் எதிரே வந்த மீராவிடம்.. சற்றே எரிச்சலான குரலில் கேட்டான்..!!

“யார் அவனுக.. சரியான லூசுப்பசங்களா இருக்கானுக..??”

மீரா அவனையும் அவனது கேள்வியையும் மதியாமல்.. அவனை கடந்து எதிர்ப்புறம் சென்றாள்.. அவளுடைய படுக்கை அறைக்குள் நுழைந்தாள்..!! ஜன்னலை நெருங்கியவள்.. சற்றே பதுங்கிக்கொண்டு.. திரைச்சீலையை விலக்கி வெளிப்புறம் பார்வையை வீசினாள்..!! அந்த வீட்டின் நுழைவாயிலை திறந்து கொண்டு வெளியேறுகிற.. சாலமன் மற்றும் அசோக்கின் முதுகுப்புறம் தெரிந்தது.. அவர்கள் பேசிக்கொண்டது கூட மீராவின் காதில் தெளிவாக விழுந்தது..!!

“ஏண்டா இப்படி பண்ற..??” சாலமன் சலிப்பாக கேட்டான்.

“ப்ச்.. உள்ள ஒரு பொண்ணு இருக்கா மச்சி.. நான் பாத்தேன்.. கண்ணாடில நல்லா தெரிஞ்சது.. கன்ஃபார்ம்ட்..!!”

“ஐயே.. அது ஏதாவது ஐட்டமா இருக்கும் மச்சி..!!”

“என்னது.. ஐட்டமா..??”

“ஆமாண்டா..!! பொண்டாட்டி ஊர்ல இல்லைன்றான்.. ஜாலியா ஜல்ஸா பண்ணலாம்னு ஏதாவது ஐட்டத்தை கூட்டிட்டு வந்திருப்பான்..!! சிவ பூஜைல கரடி மாதிரி உள்ள நொழைஞ்சதும் இல்லாம.. நோண்டி நோண்டி கேள்வி வேற கேட்டுட்டு இருக்குற நீ..!! அந்த ஆளை பாத்தியா.. எப்படி டென்ஷன் ஆயிட்டான்னு..?? நல்லவேளை.. அவன்பாட்டுக்கு கோவத்துல கையை நீட்டிருந்தான்னா என்ன பண்றது..??”

“ம்ம்..?? பதிலுக்கு நாமளும் நீட்ட வேண்டியதுதான்..!!”

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top