கண்ணாமூச்சி ரே ரே – 56
( Tamil Sex Story - Kannamoochi Rae Rae 56)
“என்னாச்சு..??” தாமிரா கேட்க,
“ஒ..ஒன்னுல்ல..!!” ஆதிரா தடுமாறினாள்.
ஆதிரா சொல்லாவிட்டால் என்ன.. அக்காவின் முகமாற்றத்தில் இருந்தே, அவளுடைய மனநிலையை கச்சிதமாக புரிந்துகொண்டாள் தாமிரா..!!
“என்ன.. அத்தான்கூட உரசிட்டு நிக்கிறது உனக்கு எரிச்சலா இருக்கோ..??” என்று கேலியான குரலிலேயே கேட்டாள்.
“இ..இல்ல.. அப்படிலாம் ஒன்னுல்ல..!!” ஆதிரா பலவீனமாகவே மறுத்தாள்.
“ஹாஹா.. ஒன்னும் பயப்படாத.. உன் புருஷனை ஒன்னும் நான் வளைச்சுப்போட்ற மாட்டேன்..!!”
“ஏய் ச்சீய்.. லூஸு..!!”
“குடு.. டெலிட் பண்ணிடலாம்..!!”
“ஏய் வேணாண்டி.. பரவால..!!”
பதறிய ஆதிராவை பொருட்படுத்தாது, அவளது கையிலிருந்த கேமராவை பிடுங்கி, அந்த ஃபோட்டோவை படக்கென டெலிட் செய்தாள் தாமிரா..!!
“ஓகேவா இப்போ..?? ஹாஹா..!!” என்று அக்காவை பார்த்து போலியாக சிரித்தாள்.
“ப்ச்.. ஏன்டி டெலிட் பண்ணின..?? நான் ஒன்னும் அதுக்காக சொல்லல..!!”
“அடடடடா..!! விடு விடு.. எல்லாம் எனக்கு தெரியும்..!! உனக்கு பிடிக்கலல.. அப்புறம் என்ன..?? அதான் டெலிட் பண்ணிட்டேன்.. அக்கா இப்போ ஹேப்பிதான..??” கண்சிமிட்டி அழகாக சிரித்தாள் தாமிரா.
“ஹ்ம்ம்ம்ம்..!!! தேங்க்ஸ்டி..!!!”
பூரிப்பான முகத்துடன் சொன்ன ஆதிராவின் மனது, அப்போதைக்கு அமைதிப்பட்டுப் போனது.. ஆனால், புகைப்படத்தை அழித்து நீக்கிய தாமிராவின் மனதோ, ஒருவித பதைபதைப்புக்கு உள்ளாகியிருந்தது..!! எப்படியாவது அந்த புகைப்படத்தை, மீண்டும் மீட்டெடுத்து விடவேண்டுமே என்கிற பதைபதைப்பு..!!
அன்று மதியமே தாமிரா அந்தவேலையில் மூழ்கியிருந்தாள்.. கேமராவின் மெமரி ஸ்டிக்கில் இருந்து, டெலிட் செய்யப்பட்ட அந்த புகைப்படத்திற்கு, டேட்டா ரெகவரி டூல் மூலம் திரும்பவும் உயிர்கொடுக்கிற வேலை..!! ஒருவழியாக அந்த புகைப்படத்தை அவள் ரெகவர் செய்து, அவளும் சிபியும் அருகருகே உரசி நிற்பதை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்.. ஆதிரா அந்த அறைக்குள் நுழைந்தாள்..!! அக்காவின் வருகையை உணர்ந்ததுமே, புகைப்படத்தை படக்கென மூடி, ஏதோ கட்டுரை டைப் செய்வது போல பாவ்லா செய்தாள் தாமிரா..!! கம்ப்யூட்டர் டேபிளில் வந்து படாரென விழுந்தது அந்த ஆட்டோக்ராஃப் புத்தகம்..!!
“என்னடி இது..??”
“எ..எது..??”
“ம்ம்ம்ம்..??? இது..!!!”
ஆட்டோக்ராஃப் புத்தகத்தில்.. ஆதிரா எடுத்துக்காட்டிய பக்கத்தில்.. அகல்விழியால் எழுதப்பட்ட அந்த வாசகம்..!!
“தெளிவாக யோசி பெண்ணே.. துணிச்சலாக ஒரு முடிவெடு.. உனது காதல் கைகூட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!! – அன்புத்தோழி அகல்விழி”
சிபியை மேற்கோள் காட்டியே அகல்விழி அதை எழுதியிருந்தாள்..!! ஆனால்.. அந்தமாதிரியான ஒரு நிலைமையில்.. அந்த உண்மையை.. அக்காவிடம் தாமிராவால் சொல்ல முடியாதே..?? காதலன் யார் என்று அவள் கேட்டதற்கு.. ஒரு சிறு திகைப்புக்கு அப்புறம், கதிர் மீது பழியை தூக்கிப் போட்டாள் தாமிரா..!! தன்னை காதலித்து தன்னால் நிராகரிக்கப்பட்ட கதிரின் பெயரை.. இப்படியொரு சூழ்நிலையில் சமயோஜிதமாக உபயோகப்படுத்திக் கொண்டாள்..!! அப்பாவிடம் பேசலாம் என்று கிளம்பிய ஆதிராவை..
“ஹையோ.. சும்மா இருக்கா நீ வேற.. காரியத்தையே கெடுத்துடாத..!! இப்போத்தான் உனக்கும் அத்தானுக்கும் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சிருக்காங்க.. இந்த நேரத்துல இதைப்போய் சொல்லி அவங்களை டென்ஷனாக்க வேணாம்..!! நீ மொதல்ல கல்யாணம் ஆகி இந்த வீட்டை விட்டு கெளம்பு.. என் பிரச்சினையை நான் பாத்துக்குறேன்..!! கொஞ்ச நாளைக்கு இந்த விஷயத்தை உனக்குள்ளேயே வச்சுக்கோக்கா.. யார்ட்டயும் சொல்லாத.. ப்ளீஸ்..!!” என்றுகூறி அப்போதைக்கு செயலிழக்க செய்துவிட்டாள்.
அக்காவின் விஷயத்தில்தான் அவ்வாறு வாயடைத்துப்போக வைக்க முடிந்தது தாமிராவால்.. சிபியின் விஷயத்தில் அவளால் அது இயலவில்லை..!! அடுத்து வந்த ஒரு வாரம், பத்து நாட்கள்.. தீயின் மீது நிற்கிற உக்கிரமான தகிப்பை உணர்ந்தாள் தாமிரா..!! ஒருபக்கம் அக்காவின் மீதான அளவிலா அன்பு.. இன்னொருபக்கம் சிபியின் மீதான ரகசியக் காதல்.. இரண்டுக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகிப் போனாள்..!!
சிபி தினசரியும் அவளை கைபேசியில் அடிக்கடி அழைத்தான்.. தாமிரா ஆரம்பத்தில் அவனது அழைப்பை உதாசீனம் செய்து பார்த்தாள்.. அப்புறம்.. அவளாலேயே முடியாமல் அவனுடன் பேச ஆரம்பித்தாள்..!!
அக்காவின் அருமை பெருமைகளை சொல்லி.. சிபியின் மனதை மாற்ற முயன்றாள் தாமிரா..!! அகத்துக்குள்ளிருந்த காதலின் தீவிரத்தை சொல்லி.. தாமிராவை தன்வழிக்கு கொண்டுவர முனைந்தான் சிபி..!! இரண்டு வெவ்வேறு விதமான முயற்சிகளில்.. சிபிதான் வெற்றியடைந்தான் என்று சொல்லவேண்டும்.. தாமிரா கொஞ்சம் கொஞ்சமாக தோற்றுக்கொண்டிருந்தாள்..!! Sunni Oombum
Tamil Sex Story
– தொடரும்
What did you think of this story??
Comments