ஐ ஹேட் யூ பட் – 37
(Tamil New Sex Stories - I Love U But 37)
Tamil New Sex Stories – அசோக் சாந்தமாக சொன்னான். அவனுடைய ஆத்திரம் தணிந்து போயிருந்ததில் பிரியாவுக்கும் இப்போது நிம்மதியாக இருந்தது. அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு அவர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. புயலடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது. கைப்பிடி சுவற்றில் சாய்ந்தவாறு.. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு.. வானத்தை வெறித்துக் கொண்டிருந்தனர்..!!
சிறிது நேரம் கழித்து ப்ரியா முகத்தை பக்கவாட்டில் திருப்பி, அசோக்கை பார்த்தாள். அவனுடைய முகத்தில் எந்தவித சலனமும் இருக்கவில்லை. ப்ரியாவின் இதழ்களில் இப்போது மெலிதாக ஒரு புன்னகை அரும்பியது. தனது கையால் அசோக்கின் கையை தேடிப்பிடித்தாள். அவனது விரல்களோடு தனது விரல்களை கோர்த்துக் கொண்டாள். மென்மையாக நெறித்தாள். அசோக் இப்போது அவளுக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவன் அமைதியாய் நின்றிருக்க, ப்ரியாதான் மெல்லிய குரலில் கேட்டாள்.
“யார் அந்தப்பொண்ணு..??”
“எ..எந்தப்பொண்ணு..??”
“அதான்.. நீ லவ் பண்ற அந்த லக்கி கேர்ள்..!! செண்பகம் இல்லைன்னு சொல்லிட்ட.. அப்படினா வேற யாரு..??”
இப்போது அசோக் திரும்பி ப்ரியாவின் முகத்தை ஏறிட்டான். ஓரிரு வினாடிகள் அவள் கண்களையே கூர்மையாக பார்த்தான். அப்புறம் என்ன நினைத்தானோ.. ஒரு பெருமூச்செறிந்துவிட்டு, சுரத்தற்ற குரலில் சொன்னான்.
“நான் யாரையும் லவ் பண்ணல..!!”
“ப்ச்.. அப்புறம் ஏன் அன்னைக்கு அப்பாட்ட அப்படி சொன்ன..??”
“அது.. சும்மா அவரை சமாளிக்க பொய் சொன்னேன்..!!”
“இல்ல.. இப்போ நீ சொல்றதுதான் பொய்..!! நீ யாரையோ லவ் பண்ற..!!”
“ப்ச்.. அதான் இல்லன்னு சொல்றேன்ல..??”
“கமான் அசோக்.. ஏன் மறைக்கிற..?? இத்தனை நாளா நீ எங்கிட்ட மறைச்சதுக்கே உனக்கு நல்ல பனிஷ்மன்ட் கொடுக்கணும்..!! சொல்லு.. யாரை லவ் பண்ற..?? எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்..!!”
“……………..”
“ஹ்ம்ம்ம்… எங்கிட்ட சொல்றதுல என்னடா தயக்கம்..?? இதுதான் நீ என் ப்ரெண்ட்ஷிப்கு தர்ற மரியாதையா..?? யாரை லவ் பண்ணாலும் உடனே எங்கிட்ட வந்து சொல்லிருக்க வேணாமா..?? ம்ம்..??” ப்ரியா புன்னகையுடன் கேட்க, அசோக்கும் ஏதோ ஞாபகத்தில்..
“ப்ச்.. வேற யாரையாவது லவ் பண்ணிருந்தாத்தான் உடனே உன்கிட்ட சொல்லிருப்பேனே..!!” என்று அவசரமாக சொல்லிவிட்டான். ப்ரியாவிற்கு உடனே சுருக்கென்று இருந்தது. ‘என்ன சொல்லுகிறான் இவன்..??’
“எ..என்ன..?? இப்ப என்ன சொன்ன.. திரும்ப சொல்லு..??” என்று நெற்றியை சுருக்கியவாறு கேட்டாள். அசோக் இப்போது சுதாரித்துக்கொண்டவனாய்..
“யா..யாரையாவது லவ் பண்ணிருந்தாத்தான் உடனே உன்கிட்ட சொல்லிருப்பேனேன்னு சொன்னேன்..!!” என்று சற்று முன் சொன்னதை சற்றே மாற்றி சொன்னான்.
“இல்ல இல்ல.. வேற யாரையாவதுன்னு சொன்ன..?? அப்படின்னா என்ன அர்த்தம்..??”
“ப்ச்.. அப்படிலாம் நான் சொல்லவே இல்ல..!!”
“ம்ஹூம்.. எனக்கு தெளிவா கேட்டுச்சு..!! வேற யாராவதா இருந்தா எங்கிட்ட உடனே சொல்லிருப்ப.. அப்போ யாரா இருந்தா எங்கிட்ட சொல்ல தயங்கிருப்ப..?? யோசிச்சு பாத்தா.. ம்ம்ம்.. ம்ம்ம்..”
ப்ரியாவின் மூளை இப்போது சுர்ரென சுறுசுறுப்பாக இயங்கியது. ஆறு வருடங்களாக அசோக்குக்கும் அவளுக்குமான நிகழ்வுகள்.. அப்போது அவனுடைய பேச்சு.. பார்வை.. நடவடிக்கைகள்.. எல்லாம் பளிச் பளிச்சென மின்னல் போல அவளுடைய நினைவில் வந்து போயின..!! அவள் தலையை சற்றே கவிழ்த்தவாறு அந்த மாதிரி யோசித்துக்கொண்டிருக்க, அசோக் அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். எல்லாவற்றையும் அவசரமாய் ஆராய்ந்த ப்ரியாவின் புத்தி.. அவளுக்கு ஒரு முடிவை அறிவிக்க.. அவள் இப்போது தனது கருவிழிகளை மேலே உருட்டி.. அசோக்கின் முகத்தை ஒரு மேல்ப்பார்வை பார்த்து.. பட்டென்று கேட்டுவிட்டாள்..!!
“நீ என்னைத்தான லவ் பண்ற..??”
“ஹேய்.. அ..அதுலாம் ஒண்ணுல்ல..!!” அசோக் தடுமாற்றமாய் சொன்னான்.
“இல்ல இல்ல.. நீ என்னைத்தான் லவ் பண்ற..!! மறைக்காத அசோக்.. உண்மையை சொல்லு.. ப்ளீஸ்..!!” ப்ரியா தவிப்பாக கேட்டாள்.
“ஏய்.. அதான் இல்லைன்னு சொல்றேன்ல..??” அசோக் சொல்லும்போதே அவனையும் அறியாமல், ஒரு சிறு புன்னகை அவனுடைய இதழ் வழியே கசிந்தது.
“பாரு பாரு.. சிரிக்கிற பாரு..!! இட்ஸ் கன்ஃபார்ம்ட்.. யு ஆர் இன் லவ் வித் மீ..!!” ப்ரியா முகமெல்லாம் பரவசமாய் சொல்ல, அசோக் இப்போது பட்டென முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டான்.
“ஒய்.. உனக்கென்ன லூசா..?? சொன்னா புரியாதா..?? நான்தான் இல்லைன்னு சொல்றேன்ல..?? அப்புறமும் நாந்தான நாந்தானன்னு கேட்டா என்ன அர்த்தம்..?? நான் யாரையும் லவ் பண்ணலை.. லவ் பண்ணலை.. லவ் பண்ணலை..!! போதுமா..???”
அசோக் அப்படி பெரிய குரலில் கத்த, ப்ரியா இப்போது சோர்ந்து போனாள். அவனுடைய முகத்தையே ஒருமாதிரி ஏக்கமாய் பார்த்தாள். ‘ஏண்டா இப்படி என்னை சித்திரவதை செய்கிறாய்..??’ என்பது போல இருந்தது அந்தப்பார்வை. அசோக்கும் அவளுடய முகத்தையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடய பார்வையில் ஒரு குறும்பு மிளிர்ந்ததை ப்ரியா சில வினாடிகளிலேயே புரிந்து கொண்டாள். அதுவரை அவனை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தவள், இப்போது பட்டென முகம் மாற்றிக்கொண்டு முறைத்தாள்.
“நீ என்னைத்தான் லவ் பண்ற.. எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு..!! ஆனா.. அதை சொல்றதுக்கு உன் ஈகோ இடம் குடுக்கலைல..?? இத்தனை நாளா நான் ஈகோ பாத்துட்டு உன்னை கஷ்டப்படுத்தினேன்னு.. நீ இப்போ என்னை கஷ்டப்படுத்தி பாக்க நெனைக்கிறல..?? பரவால.. இட்ஸ் ஓகே..!! நானும் பாக்குறேன்.. எத்தனை நாள் நீ இப்படி இருக்குறேன்னு பாக்குறேன்..!! ‘என் லவ்வை அக்சப்ட் பண்ணிக்கோ ப்ரியா’ன்னு உன்னை எங்கிட்ட வந்து கெஞ்ச வைக்கிறனா இல்லையான்னு பாரு..!!”
ப்ரியா சவால் விடுவது மாதிரி சொன்னாள். மார்பில் புரண்ட கூந்தலை தூக்கி பின்புறம் வீசியவள், விடுவிடுவென படிக்கட்டை நோக்கி வேகமாய் நடந்தாள். அசோக்கும் இப்போது மெல்ல அவன் நின்றிருந்த இடத்தை விட்டு நகர்ந்தான். படிகளில் தபதபவென்று கோபமாக இறங்குகிற ப்ரியாவை, மேலிருந்து பார்த்தான். அவ்வளவு நேரம் தயங்கி தயங்கி சிந்திய புன்னகையை, அவன் உதடுகள் இப்போது தாராளமாய் சிந்தின. ‘போடீ லூசு.. சவால் விடுற ஆளைப்பாரு..!!’ என்று முணுமுணுத்தன.
அத்தியாயம் 23
ப்ரியா அன்று வீட்டுக்கு சென்றதுமே தன் அப்பாவை பார்த்து முதலில் பேசிய வார்த்தைகள்..
“உங்களுக்கு சிக்கன் பிரியாணி பண்ண தெரியும்ல டாடி..??”
அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் வரதராஜன் எழுந்துவிட்டார். மகளுக்கு திடீரென என்னாயிற்று என்ற குழப்பத்துடனே, மணக்க மணக்க சிக்கன் பிரியாணி தயார் செய்தார். எழுந்து குளித்து ஆபீசுக்கு கிளம்பிய ப்ரியா, அப்பா செய்து வைத்திருந்த பிரியாணியை ஒரு பெரிய டப்பாவில் அடைத்து எடுத்துக் கொண்டாள்.
“எனக்கு எதுவும் புரியலைம்மா.. திடீர்னு ஏன் உனக்கு சிக்கன் பிரியாணி மேல ஆசை..?? அதுவும் காலாங்காத்தால..??”
அப்பாவின் கேள்விக்கு ப்ரியா பதில் சொல்லாமல் புன்னகைத்தாள். ஷோல்டர் பேகுக்குள் அந்த டப்பாவை திணித்து, ஜிப் இழுத்து மூடினாள். பேகை தோளில் மாட்டிக்கொண்டாள்.
அடுத்து ஒரு மணி நேரம் கழித்து.. அவர்கள் ஆபீஸ் கேஃபிட்டீரியாவில்.. அந்த பிரியாணி டப்பா மூடி திறக்கப்பட்டு கிடந்தது..!! ஒருவித தயக்கத்துடனே.. ஓரக்கண்ணால் ப்ரியாவை மிரட்சியாக பார்த்துக்கொண்டே.. ஒரு கையால் பிரியாணி அள்ளி.. மெல்ல வாயில் திணித்துக்கொண்டாள் செண்பகம்..!!
“உ..உங்களுக்கு..??” அசை போட்டுக்கொண்டே ப்ரியாவிடம் கேட்டாள்.
“ச்ச.. அக்காக்கு வேணாண்டா.. எல்லாம் உனக்குத்தான்.. சாப்பிடு..!! இந்தா.. முட்டை எடுத்து வச்சுக்கோ..!!”
கனிவுடன் சொல்லிக்கொண்டே, தனியாக இருந்த அவித்த முட்டையை எடுத்து, தட்டில் வைத்தாள் ப்ரியா. செண்பகம் மெல்ல அதை கையில் எடுத்து, ஒரு கடி கடித்துக்கொண்டே கேட்டாள்.
“என்னால நம்ப முடியலைக்கா.. நெஜமாவே நீங்க அசோக் மாமாவை லவ் பண்றீங்களா..??”
“ஆமாண்டா..!! இப்போ இல்ல.. ரொம்ம்ம்ப நாளா லவ் பண்றேன்.. அவன் எனக்குத்தான் சொந்தம்னு என் மனசுக்குள்ள ஒரு பொசஸிவ்னஸ்..!! அந்த பொசஸிவ்னஸ்லதான் அக்கா அப்படி எல்லாம் நடந்துக்கிட்டேன்.. தேவை இல்லாம உனக்கு நெறைய கஷ்டம் கொடுத்திட்டேன்.. அக்காவை மன்னிச்சுடுடா.. ப்ளீஸ்..!!”
“சேச்சே.. பரவாலக்கா.. உங்க மேல எந்த தப்பும் இல்ல.. உங்க பொசிஷன்ல இருந்திருந்தா நானும் இதைத்தான் செஞ்சிருப்பேன்..!!” என்று சொன்ன செண்பகம் அடுத்த நொடியே செய்தது, லெக்பீஸை வாயால் கவ்வி இழுத்ததுதான்..!!
“ஹையோ.. ஹவ் ஸ்வீட் ஆஃப் யூ..!!! உன்னைப்போய் இப்படி கஷ்டப்படுத்திட்டனே.. அதை நெனச்சாத்தான் அக்காவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு செண்பகம்..!!”
“இட்ஸ் ஓகேக்கா..!!” என்று வெகுளியாக புன்னகைத்த செண்பகம், உடனே..
“பிரியாணி சூப்பரா இருக்குக்கா..!!” என்று பல் இளித்தாள்.
Comments