கண்ணாமூச்சி ரே ரே – 57

(Tamil Kamakathaikal - Kannamoochi Rae Rae 57)

Raja 2014-07-13 Comments

“ஆதிராஆஆ.. ஆதிராம்மா..!!”

அங்கிருந்தே சப்தம் எழுப்பினாள்..!! வனக்கொடி அழைப்பதை கண்டுகொள்ளாமல், சரசரவென தொடர்ந்து மேல்நோக்கி நடந்துகொண்டிருந்தாள் ஆதிரா..!! வனக்கொடி இப்போது ஓட்டமும் நடையுமாக வந்து ஆதிராவை வழிமறித்தாள்.. அவளது கையை பிடித்துக்கொண்டு..

“எ..என்னம்மா.. என்னாச்சு.. எங்க போயிட்டு இருக்க..??” என்று பதற்றமாக கேட்டாள்.

“ஒன்னுல்லம்மா.. கையை விடுங்க..!!”

“என்னன்னு சொல்லுமா.. ஏன் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு..??”

“ஐயோ.. ஒன்னுல்ல.. நீங்க வீட்டுக்கு போங்க.. எனக்கு இங்க ஒரு வேலை இருக்கு..!!”

“என்ன வேலை..??”

“வந்து சொல்றேன்.. மொதல்ல கையை விடுங்க..!!”

“சொல்லும்மா.. எனக்கு அப்டியே நெஞ்சு அடிச்சுக்குது..!!”

“ப்ச்.. சொல்றேன்ல.. விடுங்க கையை..!!”

உடம்பை முறுக்கிக்கொண்டு வனக்கொடியின் கையை பலமாக உதறித் தள்ளினாள் ஆதிரா.. தடுமாறிப்போன வனக்கொடி கால்கள் பின்னிக்கொள்ள தரையில் சரிந்தாள்.. ஒரு சிறிய பள்ளத்தில் கடகடவென உருண்டாள்..!!

வனக்கொடியை திரும்பிப்பார்க்கிற மனநிலையில் ஆதிரா அப்போது இல்லை.. விறுவிறுவென தனது நடையை தொடர்ந்தாள்..!! வனக்கொடி எழுந்து பார்ப்பதற்கு முன்பே.. அவளது கண்பார்வையில் இருந்து மறைந்து போயிருந்தாள்..!!

“ஆதிராம்மா.. ஆதிராம்மா..!!”

தனியே நின்றவாறு தலையை திருப்பி திருப்பி பார்த்து கத்திய வனக்கொடி.. ஆதிரா எந்தப்பக்கம் சென்றாள் என்பது தெரியாமல், திசைதப்பிப்போய் வேறொரு பாதையில் ஓட ஆரம்பித்தாள்..!!

அதேநேரத்தில்.. தாமிரா சிங்கமலையில் தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள்..!! சிபி தினசரி அவளிடம் பேசி தனது காதலை வலியுறுத்தியது, அவளது மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.. அக்கா மீதான அன்பும், சிபி மீதான காதலும் அவளது மனதுக்குள் ஒன்றோடொன்று மோதி சண்டையிட்டுக் கொண்டிருந்தன..!! இரண்டு வாரங்களுக்கு முன்பு தெளிவான ஒரு மனநிலையில் இருந்தவள்.. இப்போது என்ன முடிவு எடுப்பது என்றே அறியாதவளாய் குழம்பிப் போயிருந்தாள்..!!

அதன்பிறகு ஒரு ஐந்தே நிமிடங்களில் ஆதிரா சிங்கமலையின் உச்சிக்கு வந்து சேர்ந்தாள்.. எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்த தாமிராவின் எதிரே படக்கென சென்று நின்றாள்.. என்னவென்று புரியாமல் அவள் திகைப்பாக பார்க்க, கையிலிருந்த அந்த மஞ்சள் காகிதத்தை, அவளுடைய முகத்தில் கசக்கி விட்டெறிந்தாள்..!!

“ச்சீய்.. நீயெல்லாம் ஒரு தங்கச்சியாடி..??” என்று எடுத்ததுமே சீறினாள்.

என்ன நடந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள, தாமிராவுக்கு அதிக அவகாசம் தேவைப்படவில்லை.. பட்டென புரிந்துகொண்டாள்..!! அவ்வாறு புரிந்ததுமே.. தளர்ந்துபோய் மெல்ல எழுந்தவள், தடுமாற்றமாக அக்காவிடம் சொன்னாள்..!!

“அ..அவசரப்படாதக்கா.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!!”

“போதுண்டி.. நீ சிரிச்சு சிரிச்சு பசப்புனதுலாம் போதும்..!! இன்னும் என்ன சொல்லப்போற.. என்ன சொல்லி நம்பவச்சு, என் கழுத்தை அறுக்கப்போற..??”

“என்ன பேசுற நீ..?? நான் என்ன நம்பவச்சு கழுத்தை அறுத்துட்டேன்..??”

“பின்ன இதுக்கு என்னடி அர்த்தம்..??” கசக்கிப்போட்ட காகிதத்தை கைநீட்டி ஆதிரா கேட்க,

“அ..அது.. நா..நானும் அத்தானை லவ் பண்றேன்னு அர்த்தம்..!!” தாமிரா திக்கித்திணறி சொன்னாள்.

“நான் சின்ன வயசுலே இருந்தே அவரை லவ் பண்றேன்..!!”

“நானுந்தான்க்கா.. நீ எங்கிட்ட சொல்லிட்ட.. நான் வெளில சொல்லல.. அவ்வளவுதான்..!! நீ அவர்மேல எவ்வளவு ஆசை வச்சிருக்கியோ.. நானும் அவர் மேல அதே அளவு ஆசை வச்சிருக்கேன்..!!”

“ஓ..!! அந்த ஆசைலதான் அந்த மாதிரி வேலைலாம் பண்ணுனியா..??” குத்தலாக கேட்டாள் ஆதிரா.

“எந்த மாதிரி வேலை..??” தாமிராவிடமும் இப்போது வேகம் கூடியிருந்தது.

“நடிக்காதடி..!! ஃபோட்டோலயே அப்படி உரசிக்கிட்டு நிக்கிற.. நேர்ல என்ன பண்ணிருப்ப..?? கூடப்பொறந்த அக்காவுக்கே துரோகம் பண்ண துணிஞ்சிட்டல..?? நீ மைசூர் போனதே அவரை மயக்குறதுக்குத்தான..??”

“ச்சீய்.. வாயை கழுவுக்கா.. அசிங்கமா பேசாத..!! மைசூர்ல என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியுமா..??”

“என்ன நடந்திருக்கும்.. நான் சொன்னதுதான் நடந்திருக்கும்..!! அதான் இங்கவந்தும் இன்னமும் டெயிலி அவர் மனசை கரைக்க ட்ரை பண்ணிட்டு இருக்கியே..??”

“அறிவில்லாம பேசாதக்கா..!! மொதல்ல மைசூர்ல என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுட்டு பேசு..!!”

“சரி சொல்லு.. என்ன நடந்துச்சு..??”

இப்போது தாமிரா மைசூரில் நடந்த சம்பவங்களை அக்காவுக்கு சுருக்கமாக எடுத்து கூறினாள்.. ஆரம்பத்தில் சாதாரணமாக கேட்டுக்கொண்ட ஆதிரா, பிறகு மெல்ல மெல்ல முகம் மாறினாள்..!! தங்கையை பற்றி தான் நினைத்தது தவறோ என்கிற குழப்பம் ஒருபுறம்.. பொய்யை சொல்லி ஏமாற்றுகிறாளோ என்கிற குறுகுறுப்பு இன்னொருபுறம்..!! சிபி தாமிராவைத்தான் காதலிக்கிறான் என்ற செய்தியை ஆதிராவால் சுத்தமாக நம்பமுடியவில்லை.. நம்புவதற்கும் அவள் விரும்பவில்லை.. இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்றே நினைத்தாள்..!! Sunni Sappum Tamil Kamakathaikal

– தொடரும்

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top