அசோக் காலிங் அசோக் – 7

(Tamil Kamakathaikal - Ashok Calling Ashok 7)

Raja 2014-03-09 Comments

“ம்ஹூம்.. தெரியாது..!!”

“கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சுக்குவ..!!” சீனியர் பட்டென சொல்ல, திடுக்கென ஒரு பதற்றம் வந்து என்னை பற்றிக் கொண்டது.

“யோவ்.. எ..என்னய்யா சொல்ற..?” என் வாயிலிருந்து வார்த்தைகள் உதறலாக வெளிப்பட்டன.

“ஆமாம் ஜூனியர்.. சொன்னா நீ நம்பமாட்ட..!! கல்யாணம் ஆன நாள்ல இருந்தே ஆரம்பிச்சுட்டா.. காரணமே இல்லாம கன்னாபின்னான்னு அடி விழும்.. உப்புசப்பு இல்லாத மேட்டருக்குலாம் சப்புசப்புன்னு அறை விழும்..!! டெயிலி அடி உதைதான்..!! இருபத்து நாலு வருஷம்..!! ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்…!! அவகிட்ட அடிவாங்கி அடிவாங்கி.. என் உடம்புலாம் ரணரணமா ஆயிடுச்சு..!! கராத்தேலாம் பரவால ஜூனியர்.. கொஞ்சம் ப்ராக்டீஸ் எடுத்துக்கிட்டா.. சமாளிச்சுடலாம்..!! சில நேரங்கள்ல கையை முறுக்கிட்டு காட்டுத்தனமா அடிப்பா பாரு.. அதைத்தான் தாங்கிக்க முடியாது..!!” சீனியரின் குரலில் எக்கச்சக்க சோகம். பாவமாக இருந்தது.

“என்ன சீனியர்.. இப்படி பயமுறுத்துற..?”

“பயமுறுத்தலைப்பா.. உனக்கு ஃப்யூச்சர்ல வரப்போற ஃப்ராக்ச்சரைப் பத்தி சொல்றேன்..!! உனக்கு தம்மடிக்கிறது புடிக்கும்ல..?”

“ஆமாம்..”

“கல்யாணத்துக்கு அப்புறம் தம்மடிச்சா.. உன் நெஞ்சுலையே ஏறி மிதிப்பா..!!”

“ஐயையோ.. அப்போ தண்ணியடிச்சா..?”

“கு..” சீனியர் சொல்ல ஆரம்பிக்க,

“வேணாம் விடு.. எனக்கு புரிஞ்சு போச்சு..!!” என்றேன் நான் அவசரமாய்.

“ஐயையே.. நான் அதை சொல்லலை..!! ‘குடிக்கிறதைப் பத்தி கல்யாணத்துக்கு அப்புறம் நெனச்சே பாக்காதேன்’னு சொல்ல வந்தேன்..!!”

“ஓஹோ..????”

“மொத்தத்துல.. அவளை கல்யாணம் பண்ணிக்கிறதும் ஒண்ணுதான்.. கண்ணை தொறந்துக்கிட்டே கன்னி வெடி மேல காலை வைக்கிறதும் ஒண்ணுதான்..!! எந்த நேரத்துல என்ன நடக்குமோன்னு.. ஒரே டெரர்ர்ரா இருக்கும் ஜூனியர்..!!”

சீனியர் அப்புறமும் கொஞ்ச நேரம் தன் மனைவியிடம் அடிவாங்கின கதையை விரிவாக.. அழுதுகொண்டே சொன்னார். அவர் சொன்னதெல்லாம் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், நான் வேறு வழியில்லாமல் பொறுமையாக கேட்டுக் கொண்டேன். அவர் சொல்லி முடித்ததும் நான் அந்த கேள்வியை கேட்டேன்.

“ஒன்னு கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத..!! அவளோ கஷ்டப்பட்டு.. நீ எதுக்கு அவளோட குடும்பம் நடத்தனும்..? பேசாம டைவர்ஸ் பண்ணிட வேண்டியதுதான..?”

“ஏன்.. நான் உசுரோட இருக்குறது உனக்கு புடிக்கலையா..? நான் அவகிட்ட போய் டைவர்ஸ் கேட்டா.. ‘டை (die)’ மட்டுந்தான் கெடைக்கும்.. ‘வர்ஸ்’ கெடைக்காது..!!”

“ஐயையோ.. அவ்ளோ பெரிய ராட்சசியா..?” என்றேன் நான் போலி அதிர்ச்சியுடன்.

“ஆமாம் ஜூனியர்.. ஒரேடியா போட்டுத் தள்ளிடுவா..!!”

“ம்ம்ம்ம்.. நீ சொல்றதுலாம் நம்புறதுக்கு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சீனியர்.. அப்பாவியா இருக்குற என் லேகாவை.. அந்த மாதிரி அடங்கப் பிடாரியா, இமேஜின் கூட பண்ண முடியலை..!!”

“யார் அப்பாவி..? லேகாவா..? அவளைப் பத்தி என்ன தெரியும் உனக்கு..? அவ ரெண்டு வருஷம் படிச்ச காலேஜை விட்டுட்டு.. உன் காலேஜ்ல டைரெக்ட் தேர்ட் இயர் வந்து சேர்ந்தாளே.. அதுக்கு என்ன ரீசன்னு தெரியுமா..?”

“அந்த காலேஜ்ல ராகிங் தொல்லை ஜாஸ்தின்னு..”

“அதெல்லாம் சும்மா.. இவளை ராகிங் பண்றாங்களா..? இவ யாரையும் ராகிங் பண்ணாம இருந்தா சரிதான்..!! அவளோட ரவுடித்தனம் தாங்காம.. பழைய காலேஜ்ல இருந்து அவளை தொரத்தி விட்டுட்டாங்க..”

“ரவுடித்தனமா..? என்னய்யா சொல்ற..?” எனக்கு டென்ஷன் ஏறிக்கொண்டே சென்றது.

“பின்ன..? பழைய காலேஜ்ல ஏழெட்டு பேர் மண்டையை உடைச்சிருக்கா.. அவளைப் போய் அப்பாவின்ற..?”

“அவளைப் பாத்தா அப்படிப்பட்ட பொண்ணு மாதிரி தெரியலையே சீனியர்..?”

“காரணம் இருக்கு ஜூனியர்.. உனக்கு அவளோட சுயரூபம் தெரியலை..!! அவ இப்போ ஒரு வருஷமா.. உடைக்காவிரதத்துல இருக்குறா.. அதான்..!!”

“என்னது..??? உடைக்காவிரதமா..??? உண்ணாவிரதம் தெரியும்.. அதென்ன உடைக்காவிரதம்..?”

“யார் மண்டையையும் ஒரு வருஷத்துக்கு உடைக்கிறது இல்லை’ அப்டின்னு ஒரு விரதம்..!!”

“என்னய்யா.. எல்லாம் புதுசு புதுசா சொல்ற..? எதுக்கு அப்படி ஒரு விரதம் இருக்குறா..?”

“சொல்றேன் ஜூனியர்.. இந்த வாரம் அவளுக்கு பர்த்டே வருது.. ஞாபகம் இருக்கா..?”

“ஆமாம்..”

“போன வருஷ பர்த்டே அதுவுமா.. அவளோட பழைய காலேஜ்ல பிரச்னை ஆயிடுச்சு..!! இவ ஒரு கம்ப்யூட்டர் மானிட்டரை தூக்கி.. ஒரு பையன் மண்டைல போட்டுட்டா..”

“என்னது..????? மானிட்டரைத் தூக்கி மண்டைல போட்டுட்டாளா..???” கேட்கும்போதே எனக்கு குலை நடுங்கியது.

“ஆமாம்.. அதனாலதான் அவளை காலேஜ்ல இருந்து தொரத்தி விட்டாங்க..!! அவ அப்பாவும், அண்ணனும் ‘நீ திருந்தவே மாட்டியா..?’ன்னு அவளை கன்னாபின்னான்னு திட்டிருக்காங்க..!!”

“ம்ம்ம்..”

“அப்போத்தான் அவ அண்ணன் அவளுக்கு ஒரு சேலன்ச் பண்ணிருக்கான்..”

“என்ன..?”

“இன்னும் ஒரு வருஷத்துக்கு யார் மண்டையையும் இவ உடைக்காம இருந்தா.. சொத்துல அவனோட ஷேர்ல பாதியை இவளுக்கு எழுதி வைக்கிறதா..!! இவளும் அந்த சேலஞ்சை அக்சப்ட் பண்ணிட்டு.. இப்போ..”

“உடைக்கா விரதத்துல இருக்குறா..!!”

“ஆமாம்..!!”

“ம்ம்ம்ம்.. ரொம்ப கேவலமான ப்ளாஷ்பேக்கா இருக்கு..!! சொத்துக்காக பலபேர் மண்டையை உடைச்ச கதைலாம் கேட்டிருக்கேன்..!! ஆனா.. யார் மண்டையையும் உடைக்காம விரதம் இருக்குறதை இப்போத்தான் கேள்விப்படுறேன்..!! ஆமாம்.. இந்த மேட்டர்லாம் உனக்கு எப்படி தெரியும்..!!”

“எல்லாம் அவளே சொன்னா..”

“அவளேவா..??”

“ஆமாம் ஜூனியர்.. இந்த பொறந்த நாளோட.. அவளோட அந்த விரதமும் முடியுது..!! அப்புறம் அவளோட கேரக்டர்லாம் கொஞ்சம் கொஞ்சமா உனக்கு தெரிய வரும்.. அப்போ இந்த மேட்டரும் ஒன்னு ஒன்னா வெளில வரும்..!!”

“ம்ம்ம்ம்.. என்னவோ போயா..!! நீ சொல்றதுலாம் நம்புற மாதிரியே இல்ல..!!” நான் இன்னும் நம்பிக்கை இல்லாமல் சொல்ல, சீனியர் கடுப்பானார்.

“அடப்பாவி.. விடிய விடிய கதை கேட்டு..”

“நயன்தாராவுக்கு பிரபுதேவா பெரியப்பான்னு சொல்றேன்றியா..?”

“அதை வேற மாதிரில சொல்வாங்க..?”

“நான் இப்படித்தான் சொல்வேன்..”

“அப்போ.. என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல..?”

“ஆமாம்..!!” Pundai Tamil Kamakathaikal

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top