அசோக் காலிங் அசோக் – 7

(Tamil Kamakathaikal - Ashok Calling Ashok 7)

Raja 2014-03-09 Comments

Tamil Kamakathaikal – அவர் பரிதாபமாக சொன்னார். அவருடைய குரலிலேயே அவர் படும் கஷ்டம் எனக்கு தெளிவாக புரிந்தது. ஆனால் அவருக்கு என்ன பதில் சொல்வதென்றுதான் எனக்கு எதுவும் விளங்கவில்லை. ஒரு வழியாய் சாந்தமாக சொன்னேன்.

“ஓகே சீனியர்.. கொறைச்சிக்கிறேன்..!! நீ மேட்டருக்கு வா..!!”

1

“அ..அது.. அது.. இந்த மேட்டர்.. லே..லேகா சம்பந்தப்பட்டது..!!” அவர் தயங்கி தயங்கி சொல்ல, நான் ஆச்சரியமானேன்.

“லேகாவா..? லேகாவை உனக்கு தெரியுமா..?”

“தெரியுமாவா..? அவ கூடத்தான் இருபத்து நாலு வருஷமா குடும்பம் நடத்திக்கிட்டு இருக்குறேன் ஜூனியர்..!!”

அவர் சொன்னதைக் கேட்க எனக்கு எக்கச்சக்க சந்தோஷமாய் இருந்தது. நான் இப்போது புதிதாக உற்சாகம் கிளம்பியவனாய் கேட்டேன்.

“ஹையோ சீனியர்.. சொல்லவே இல்ல..!! ச்சே.. உன்கூட இவ்வளவு பேசிட்டு.. இந்த முக்கியமான மேட்டரையே கேட்காம விட்டுட்டனே..?? ம்ம்ம்ம்… அப்போ.. லேகாதான் நம்ம பொண்டாட்டியா..?”

“ச்சீய்… அசிங்கமா பேசாத ஜூனியர்..!!”

“அசிங்கமாவா..? நான் கரெக்டாத்தான பேசுறேன்..??”

“நீ சொன்னதுல பொருட்குற்றம் இல்ல.. ஆனா சொற்குற்றம் இருக்கு..!! ‘நம்ம பொண்டாட்டியா..?’ ன்னு நீ கேக்குறது நாராசமா என் காதுல விழுது..”

“அதானால என்ன சீனியர்.. நமக்குள்ளதான பேசிக்கிறோம்..? வேற யாராவது கேட்டாத்தான் தப்பா எடுத்துக்குவாங்க..!! ம்ம்ம்.. அப்புறம்.. நமக்கும் லேகாவுக்கும் எத்தனை கொழந்தைங்க பொறந்துச்சு..?”

“ஒரே ஒரு பையன்தான்..!!”

“ஓஹோ..? என்ன பண்றான் இப்போ..?”

“சந்திர மண்டலத்துல.. ஒரு சாப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்ணுறான்..!!”

“சந்திர மண்டலத்துலையா..? என்னய்யா சொல்ற..??” நான் நம்பமுடியாமல் கேட்டேன்.

“இதையே நம்ப மட்டேன்றியே.. அவன் யூ.கே.ஜி படிக்கிறதுக்கு யூ.கே போனான்னு சொன்னா.. நீ நம்புவியா..?”

“சத்தியமா நம்ப முடியலைய்யா..!!”

“ம்ம்ம்.. உலகம் இப்போ ரொம்ப சுருங்கிப் போச்சு ஜூனியர்..”

“ம்ம்ம்.. சரி சீனியர்..!! லேகாவைப் பத்தி ஏதோ மேட்டர்னு சொன்னியே.. என்ன அது..?”

“நான் சொல்றேன்.. ஆனா அவசரப் பட்டு என்னை நீ திட்டக் கூடாது..!!”

“சேச்சே.. அது உன்னைப் பத்தி தெரியிறதுக்கு முன்னாடி.. உன்னை லூசுன்னு திட்டிருப்பேன்.. அதுலாம் நீ மனசுள் வச்சுக்காத..!! இனிமே உன்னை நான் அந்த மாதிரி திட்ட மாட்டேன்..!! தைரியமா சொல்லு..!!”

“அ..அது.. அது..”

“ம்ம்ம்ம்…??”

“அ..அது.. அது வந்து..” சீனியர் தயங்கினார்.

“ம்ம்ம்.. சொல்லு சீனியர்.. ஏன் இப்படி தயங்குற..?” நான் அவரை தூண்டினேன்.

“லே..லேகாவை”

“ம்ம்.. லேகாவை..?”

“லேகாவை நீ கழட்டி விட்டுடனும்..!!”

என் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை என்னால் நம்பவே முடியவில்லை. என்ன சொல்லுகிறான் இந்த ஆள்..? சுய நினைவுடன்தான் சொல்கிறானா..? இல்லை போதையில் உளறுகிறானா..? திரும்ப ஒருமுறை கேட்டேன். இப்போது என் வார்த்தைகளில் எக்கச்சக்க டென்ஷன்..!!

“யோவ்.. என்னய்யா சொல்ற நீ..?”

“ஆ..ஆமாம் அசோக்.. லேகாவை நீ கழட்டி விடனும்..!! அவ நமக்கு வேணாம் அசோக்..!!”

சீனியர் தெள்ளத்தெளிவாகவும், அழுத்தம் திருத்தமாகவும் சொல்ல.. நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்..!!

2

நண்பர்களே..!! இந்த மூன்றாவது பாகம் நான் நினைத்த மாதிரி பெரியதாக தர முடியவில்லை..!! இருந்தாலும்.. காத்திருக்கும் வாசகர்களை ஏமாற்ற விருப்பம் இல்லாமல்.. எழுதிய வரையில் ஒரு எபிசோடாக தருகிறேன்..!! சற்றே அனுசரித்து இந்த பாகத்தை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..!! நன்றி..!!

எபிஸோட் – III

ஒரு ஃபிகரை உஷார் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? சொல்றேன்.. எல்லாம் கேட்டுக்குங்க..!! மொதல்ல டெயிலி குளிக்கணும்..!! காதலுக்கு கண்ணு வேணா இல்லாம இருக்கலாம்.. ஆனா மூக்கு இருக்குது..!! அப்புறம் அந்த ஃபிகர் போற எடத்துக்குலாம் வோடஃபோன் நாய் மாதிரி பின்னாலேயே திரியணும்..!! அது அடிக்கிற மொக்கை ஜோக்குக்குலாம் வெக்கமே இல்லாம சிரிக்கணும்..!! பூ.. மழை.. கவிதை.. கழுதைன்னு அந்த ஃபிகருக்கு புடிச்சதுலாம் நமக்கும் புடிக்கும்னு மனசாட்சியே இல்லாம சொல்லணும்..!! முடிஞ்சா அந்த கழுதைல ரெண்டு.. ஸாரி.. கவிதைல ரெண்டு.. எழுதி நீட்டணும்..!! இன்னும் சொல்லிட்டே போகலாம்..!! மொத்தத்துல நாம ரொம்ப நல்லவன்ற மாதிரியே ஒரு ஸீன் போடணும்..!! ஒன்னு மட்டும் சொல்றேங்க.. நல்லவனா கூட இருந்திடலாம்.. ஆனா நல்லவன் மாதிரி ஸீன் போடுறது ரொம்ப ரொம்ப கஷ்டம்..!!

மேல நான் சொன்னதுலாம் ஒண்ணுக்காவாத சப்பை ஃபிகரை கரெக்ட் பண்றதுக்கு..!! அந்த ஃபிகரு.. அட்டு பீஸா இல்லாம.. கொஞ்சம் அழகான பீஸா இருந்துட்டா.. அவ்வளவுதான்..!! அதை கரெக்ட் பண்ணி காதலிக்க வைக்கிறதை விட.. கர்நாடகாக்காரனை கரெக்ட் பண்ணி காவிரித்தண்ணியை வர வச்சுடலாம்..!! அவ்ளோ கஷ்டம்..!! நம்மோட சேர்ந்து இன்னும் பத்துப்பேரு.. டெயிலி காலைல எந்திரிச்சு குளிக்க ஆரம்பிச்சுடுவானுக..!! காப்பி அடிச்ச கவிதையை அந்த பீஸ்கிட்ட காட்டலாம்னு போனா.. நமக்கு முன்னாடியே நாலஞ்சு பேர் ஷோ ஓட்டிட்டு போயிருப்பானுக..!! ஹெவி காம்பட்டிஷனா இருக்கும்..!! எல்லாருக்கும் அல்வா கொடுத்து.. அந்த பீஸை நம்மைப் பாத்து ‘ஐ லவ் யூ..!!’ சொல்ல வைக்கிறதுக்குள்ள.. ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பா.. தாவு தீந்துடும்..!!

அப்புறம்.. கரெக்ட் பண்ணின பீஸ் நம்ம கையை விட்டுப் போகாம பாத்துக்குறது இருக்கே.. அது இதெல்லாம் விட பெரிய கஷ்டம்..!! ஆனா.. அது இந்த கதைக்கு தேவையில்லாததால.. கரெக்ட் பண்ற கஷ்டத்தோட நிறுத்திக்குவோம்..!!

என்னை காதலிக்கும் ஒரு ஜீவன் ஆக லேகா எனக்கு கிடைத்ததே எனக்கு அளவிலா சந்தோஷம்..!! அதிலும் அவள் தேவலோக அழகி (அவங்க பேரு ரம்பாவோ.. நமீதாவோல..?) ரேஞ்சுக்கு அம்சமாக இருந்தது எனக்கு டபுள் சந்தோஷம்..!! செருப்பு முதல் செல்போன் வரை அவளே எனக்கு செலவு செய்வது ட்ரிப்பில் சந்தோஷம்..!! அத்தனை சந்தோஷத்தையும் மொத்தமாக குழி தோண்டிப் புதைப்பது மாதிரி ‘லேகாவை கழட்டி விடவேண்டும்’ என்று அந்த ஆள் சொன்னது எனக்கு பயங்கர எரிச்சலை கிளப்பி விட்டது. அந்த எரிச்சலை அடக்க முடியாமலே கேட்டேன்.

“என்ன சீனியர்.. வெளையாடுறியா..?”

“வெளையாடுறனா..? சீரியஸா சொல்றேன் ஜூனியர்.. லேகாவை கழட்டி விட்டுடு..”

“யோவ்.. போய்யா..!! ரொம்ப கூலா வந்து அவளை கழட்டி விடுன்னு சொல்ற..? அதுலாம் முடியாது.. அவளை கரெக்ட் பண்றதுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா..?”

“ஹாஹா..!! நீ என்ன கஷ்டப்பட்டேன்னு எனக்கு தெரியும் ஜூனியர்.. அந்த ஏழுமலையை எட்டி உதைச்சதை விட.. வேற என்ன பெருசா கஷ்டப்பட்டுட்டே..? அவளா வந்தா.. அவளா சிரிச்சா.. அவளா கைகொடுத்தா.. அவளா ஐ லவ் யூ சொன்னா..!! நீ என்ன பண்ணின..?”

“ம்ஹூம்.. அதுலாம் உன்கிட்ட சொல்லி புரிய வைக்க முடியாது..!! நான் அவளை சின்சியரா லவ் பண்றேன்.. உன் பேச்சை கேட்டு அந்த லவ்வுக்கு என்னால துரோகம் பண்ண முடியாது..!!”

“ஜூனியர்.. மொதல்ல நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!! நான் உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன்.. உனக்கு நான் கெடுதல் நெனைப்பேனா..? உனக்கு கெடுதல் பண்ணினா.. அது எனக்கு நானே கெடுதல் பண்ணிக்கிற மாதிரி..!! நீதான் நான்றதை ஞாபகம் வச்சுக்கிட்டு பேசு..!!”

“இருந்துட்டு போ.. நீதான் நானா இருந்துட்டு போ..!! ஆனா.. நான் ஒரு விஷயத்துல கமிட் ஆயிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்..!! அந்த லாஜிக் படி பாத்தா கூட.. உன் பேச்சை நான் கேட்க கூடாது..!!” நான் சீரியசாக சொல்ல,

“என்ன எழவெடுத்த லாஜிக்டா அது..? இங்க பாரு ஜூனியர்.. இந்த மாதிரி படத்துல வர்ற பன்ச் டயலாக்லாம் பேசி.. ஒரு பாழுங்கெணத்துல போய் விழுந்துடாத..!!” சீனியர் நக்கலடித்தார்.

“பாழுங்கெணறா..? யாரை சொல்ற நீ..?”

“லேகாவைத்தான்..!! சரியான ராட்சசி அவ..!! அவளை கட்டிக்கிட்டா.. உன் வாழ்க்கையே நாசமா போயிடும் ஜூனியர்..”

3

“சும்மா உளறாத சீனியர்.. லேகாவைப் பத்தி உனக்கு என்ன தெரியும்..?”

“ஹாஹா..!! நீ அவளை ஒருவருஷமா லவ்தான் பண்ணிருக்குற.. நான் அடிஷனலா.. அவ கூட இருபத்துநாலு வருஷம் குடும்பம் நடத்தி குப்பை கொட்டிருக்கேன்..!! எனக்கு அவளைப் பத்தி எல்லாம் தெரியும்.. உனக்குத்தான் அவளைப் பத்தி ஒரு எழவும் தெரியாது..!!”

“ஏன் தெரியாது.. நான் என் லேகாவை நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்.. அவளை பத்தி எல்லாம் தெரியும் எனக்கு..”

“ஓஹோ..? அப்போ நான் ஒரு கேள்வி கேக்குறேன்.. பதில் சொல்றியா..?”

“கேளு..”

“லேகாவுக்கு கராத்தே, குங்ஃபூ-லாம் தெரியும்.. அந்த மேட்டர் உனக்கு தெரியுமா..?”

Comments

Scroll To Top