மலரே என்னிடம் மயங்காதே – 8

(Tamil Kama Stories - Malarae Ennidam Mayangathae 8)

Raja 2014-02-17 Comments

அவள் நான் சாப்பிடுவதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பசி தந்த வேகத்தில், நான் அவசர கதியில் சாப்பிடுவதையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. இப்போது நான் அவள் பக்கம் திரும்பியதும், பட்டென கண்ணீரை துடைத்துக் கொண்டாள். எதுவுமே நடவாதவள் போல இயல்பான குரலில்,

“ரசம் கொஞ்சம் போட்டுக்குங்கத்தான்..”

என்றவாறு ஒரு கரண்டியில் ரசம் அள்ளி, சாதத்தில் ஊற்றினாள். பின்பு வேறுபக்கமாய் திரும்பி, மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். நான் இப்போது அவளுக்காக சற்றே உருகிப் போனேன். ‘என் மீது இவள் எக்கச்சக்க அன்பு வைத்திருக்கிறாள்.. அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.. ஏற்றுக் கொள்ளவோ எனக்கு மனமில்லை..!! என்னதான் முடிவு இதற்கு..??’ அதே யோசனையுடன் கொஞ்ச நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அப்புறம் சாதத்தை பிசைந்து சாப்பிட ஆரம்பித்தேன். ஓரிரு நிமிடங்களில்.. நான் சாப்பிட்டு முடிக்கப் போகும் வேளையில்.. மலர் மெல்லிய குரலில் சொன்னாள்.
“ஸாரித்தான்..!!”

“ஸாரியா..? எதுக்கு..??” நான் புரியாமல் அவளை ஏறிட்டேன்.

“நேத்து நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு..”

“ஓ..!!”

“அவங்க முன்னாடி நிக்கிறது.. எனக்கு அன்ஈசியா இருக்குமேன்னுதான் நான் நெனச்சேனே ஒழிய.. நான் நடந்துக்கிட விதத்தால.. உங்களுக்கு எவ்வளவு அவமானமா இருக்கும்னு நான் நெனச்சு பாக்கலை..!!! தப்பு பண்ணிட்டேன்.. என்னை மன்னிச்சுடுங்கத்தான்..!!”

“ப..பரவால விடு..”

“இ..இனிமே.. இனிமே நீங்க தலை குனியிற மாதிரி ஒரு காரியத்தை.. ச..சத்தியமா நான் பண்ண மாட்டேன்..!! சத்தியமா..!!!!” அவள் குரல் தழதழக்க சொல்ல, எனக்கு இப்போது அவள் மீது பட்டென ஒரு பரிதாபம் வந்தது.

“ஹேய்.. இப்போ எதுக்கு அதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டு பேசுற..? நான்தான் ‘பரவால.. நான் எதுவும் நெனைக்கலை..’ ன்னு சொல்றேன்ல..? விடு..!!”

நான் இலகுவான குரலில் அப்படி சொன்னதும், மலர் சற்றே சமாதானம் ஆனாள். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அப்புறம் தொண்டையை செருமிக்கொண்டு, சகஜமான குரலில் பேச ஆரம்பித்தாள்.

“உங்ககிட்ட இன்னொன்னு கேக்கணும்..”

“என்ன..?”

“ந..நடந்ததுலாம் மனசுல வச்சுக்காம.. நீங்க எப்போவும் போல எங்கிட்ட பேசணும்..!! ரெண்டு நாளா.. என்னை பாக்குறப்போலாம் ஒருமாதிரி எரிச்சலாத்தான் பாக்குறீங்க.. முறைக்கிறீங்க.. எனக்கு அது பிடிக்கலைத்தான்.. நீங்க அப்படி எரிச்சலா என்னை பாக்குறது.. எ..என்னால தாங்கிக்க முடியலை..!!”

“…………….”

“என் காதலை என் மனசுக்குள்ளயே போட்டு பூட்டிடனும்னுதான் நான் நெனச்சிருந்தேன்.. சொன்னா நீங்க கஷ்டப்படுவீங்கன்னு எனக்கு தெரியும்..!! ஆனா.. அந்த சூழ்நிலைல.. எ..எனக்கு சொல்றதை தவிர வேற வழி தெரியலை..!!”

“…………….”

“என் காதலை ஏத்துக்க சொல்லி.. எந்த வகைலையும் இனிமே நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்..!! என் பார்வையிலையோ, வார்த்தையிலேயோ கூட.. என் காதலை காட்ட மாட்டேன்..!! என் கூட எப்போவும் போல பேசுங்கத்தான்.. ப்ளீஸ்..!!”

அவள் உருக்கமாக சொல்ல, நான் அமைதியாக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘எனக்காக எவ்வளவு ஏங்குகிறாள் இவள்..??’ என்று தோன்றியது. ஆனால்.. அந்த நினைவே இன்னொரு பக்கம் கவலையாகவும் இருந்தது..!! அவளும் நான் என்ன சொல்லப் போகிறேன் என்று தெரிந்து கொள்வதற்காக, என் முகத்தையே ஒரு மாதிரி பயமும், எதிர்பார்ப்புமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் ஓரிரு வினாடிகள்தான் யோசித்திருப்பேன். அப்புறம் மெல்ல அவளை பார்த்து நான் புன்னகைக்கவும், இப்போது அவளது தடித்து சிவந்த உதடுகளும்.. தாராளமாய் புன்னகையை பூசிக்கொண்டன..!!

“தேங்க்ஸ்த்தான்..!!” என்றாள் கண்களில் நன்றி மின்ன.

“இட்ஸ் ஓகே..!! ம்ம்ம்ம்ம்ம்… சரி.. டைமாச்சு.. நீயும் சாப்பிட்டு தூங்கு..!!”

“ம்ம்… சரித்தான்..!!”

உற்சாகமாக சொன்னவள், நான் சாப்பிட்டு முடித்த தட்டையே தன் பக்கம் இழுத்து, அதில் சாதத்தை போட்டுக் கொண்டாள். அதைப் பார்த்து லேசாக தடுமாறிய நான், ஏதோ சொல்ல நினைத்தேன். அப்புறம், பசியில் இருப்பவளை எதுவும் சொல்லி, சாப்பிடாமல் செய்து விட வேண்டாம் என்று எண்ணி, அப்படியே விட்டு விட்டேன். எழுந்து கை கழுவிக்கொண்டு, என் அறைக்குள் நுழைந்தேன். மெத்தையில் வீழ்ந்து சிந்தனையில் ஆழ்ந்தேன்.

இரண்டு நாளாய் அலைபாய்ந்து கொண்டிருந்த மனம், இப்போது சற்றே அமைதிப்பட்டிருப்பதாக தோன்றியது. மலருடன் நிலவிய அந்த இறுக்கமான சூழ்நிலை, அவளைப் போலவே எனக்கும்தான் பிடிக்கவில்லை. அதற்கு இப்போது ஒரு முடிவு ஏற்பட்டதில், ஓரளவுக்கு என் மனமும் நிம்மதியை உணர்ந்தது. ஆனால்.. மலர் அவளுடைய மனதை முழுமையாக மாற்றிக்கொண்டு, வேறொருவனை மணம் முடிக்கும் வரை என் மனதிற்கும் முழு நிம்மதி கிட்டாது என்றே தோன்றியது. கயல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று ஒரு வேதனையான எண்ணம் வேறு மனதுக்குள் ஓடியது..!!

படுக்கையிலிருந்து புரண்டு நிமிர்ந்து பார்த்தேன். கம்ப்யூட்டர் டேபிளில்.. கள்ளம் கபடம் இல்லாமல்.. கன்னத்தில் குழி விழ.. கயல் சிரித்துக் கொண்டிருந்தாள். கண்ணை இமைக்காமல்.. காதலும், குறும்புமாய்.. என்னையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள். நான் எழுந்து சென்று கயலின் ஃபோட்டோவை எடுத்து வந்து, தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டேன். இது தினமும் நான் செய்வதுதான். காலையில் கண்விழிக்க கயல் வேண்டுமே எனக்கு..??

இன்று எக்ஸ்ட்ராவாக இன்னொரு காரியமும் செய்தேன். கப்போர்ட் திறந்து, கயலுடைய ஃபோட்டோ ஆல்பத்தையும் எடுத்துக் கொண்டு வந்து படுத்தேன். கட்டிலில் வசதியாய் சாய்ந்து படுத்துக்கொண்டு, ஆல்பத்தை பொறுமையாக புரட்டி, ஒவ்வொரு ஃபோட்டோவாக பார்த்துக் கொண்டிருந்தேன். கயல் சிரித்தாள்.. கன்னம் சிவக்க வெட்கப்பட்டாள்.. நாக்கை நீட்டி பழிப்பு காட்டினாள்.. முகம் முழுவதும் தீற்றலோடு ஐஸ்க்ரீம் சாப்பிட்டாள்.. கை நிறைய வளையலும், கர்ப்பம் தாங்கிய வயிறுமாய் புன்னகைத்தாள்.. உதடுகளை ‘ஓ’வென வைத்துக்கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்..!!

ஆல்பத்தில் இருந்த ஒருபடம் என் நினைவுகளை பின்னோக்கி இழுத்து சென்றது. நானும் கயலும் நடுவில் நிற்க, எனக்கு அருகே பன்னீர், கயலுக்கு அருகே மலர் என.. நாங்கள் நான்கு பேரும் இருக்கும் படம் அது..!! நானும் கயலும் ஊட்டிக்கு தேனிலவு சென்ற போது எடுத்த படம்..!!! ஹாஹா.. வியப்பாக இருக்கிறதா..?? ஆமாம்.. நாங்கள் தேனிலவுக்கு நான்கு பேராகத்தான் சென்றோம்..!!

“ஸார்.. நீங்க கொஞ்சம் க்ளோஸா வாங்க ஸார்..!! ஏன் எல்லாரும் எதையோ குனிஞ்சு பாத்துட்டு இருக்கீங்க..? கீழ என்ன பொதையலா கெடக்குது..?? இப்படிலாம் பண்ணுனீங்கன்னா அப்புறம் நான் க்ளிக் பண்ணவே மாட்டேன்.. சொல்லிட்டேன்..!! கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க.. அப்போத்தான் போட்டோ நல்லா வரும்..!!”

அந்த ஆள் எங்கள் நால்வரையும் பொம்மைகள் மாதிரி ஆட்டுவிக்க, ‘இவனைப் போய் ஸ்னாப் அடிக்க இழுத்து வந்தோமே..?’ என்று நான் நொந்து கொண்டேன். ‘சீக்கிரம் க்ளிக் பண்ணித் தொலைடா வெண்ணை…’ என்று மனதுக்குள் அவனை மானாவாரியாக திட்டினேன். அந்த ஆளுக்கு அருகே நின்றிருந்த அவனுடைய புது மனைவியும், அதே மாதிரிதான் மனதுக்குள் அவனை திட்டியிருப்பாள் என்று தோன்றியது. இல்லாவிட்டால்.. இன்னும் கேவலமாக கூட திட்டியிருக்கலாம்..!! இடுப்பில் இரண்டு கைகளையும் ஊன்றியவாறு, ஆர்தர் வில்சன் போல் ஆக்டிங் கொடுத்துக் கொண்டிருந்த தன் புதுப்புருஷனையே.. வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஓகே.. க்ளிக் பண்ண போறேன்.. ஆல் ஸ்மைல் ப்ளீஸ்..” அவன் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தைகளுக்காக, நான் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும்போதே,

“இரு இரு.. அமுக்கிடாத.. இருப்பா.. ஒரு நிமிஷம்…” என்று பன்னீர் இடையில் புகுந்து தடுத்தார்.

“என்னாச்சுப்பா..???”

எட்டிப் பார்த்து கத்திய மலரின் குரலிலும் எக்கச்சக்க எரிச்சல். கயல் வேறு கடுப்புடன் ‘ப்ச்..!!’ என்று முகத்தை சுருக்கினாள். எல்லோருமே ஃபோட்டோ எடுக்க வந்த அந்த ஆள் மீது கொலை வெறியில் இருக்கிறார்கள் என்று மட்டும் எனக்கு புரிந்தது.

“கூலிங் க்ளாஸ் போட்டுக்குறேன்..” Mulai Tamil Kama Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top