ஐ ஹேட் யூ பட் – 24

(Tamil Kama Stories - I hate U But 24)

Raja 2013-10-22 Comments

Tamil Kama Stories – “ஏண்டா.. எப்போவும் சோனு நிகம், சாதனா சர்கம்னு செலப்ரிடி யாரையாவது கூட்டிட்டு வருவானுக.. இந்த வருஷம் நம்மளையே ஆடிப்பாட சொல்லிட்டானுக..??” அசோக்கின் கேள்விக்கு ஹரி கேலியான குரலில் பதில் சொன்னான்.

“எல்லாம் காஸ்ட் கட்டிங் மச்சி.. காஸ்ட் கட்டிங்..!!”

“ம்க்கும்.. இதுலயுமா காஸ்ட் கட்டிங்..??”

“என்ன மச்சி இப்படி கேக்குற..?? இப்போலாம் ஐடி கம்பனிஸ் காஸ்ட் கட்டிங் பண்றோம்ன்ற பேர்ல.. எதெதுன்னு வெவஸ்தையே இல்லாம எல்லாத்துலயும் கைவைக்க ஆரம்பிச்சுட்டானுக.. டாய்லட் பேப்பர் மொதக்கொண்டு இவ்ளோ காஸ்ட்லியான பேப்பர் வாங்கணுமான்னு யோசிக்கிறானுக மச்சி..!! இன்ஃப்லேஷன்றானுக.. ஸ்லோடவுன்றானுக.. மார்க்கெட் க்ராஷ்ன்றானுக.. எகனாமி க்ரைசிஸ்ன்றானுக.. என்ன சொல்றானுகன்னே ஒரு எழவும் புரியலை..!!”

“ஹ்ம்ம்…!!”

“பேன்ட்ரில இருந்த காபி கப்லாம் போன மாசம் மாத்தினானுக.. ஞாபகம் இருக்கா..??”

“ஆ..ஆமாம்.. ஞாபகம் இருக்கு..!!”

“பெருசா இருந்த கப்லாம் சின்னதா மாத்திட்டானுக..!! வொய்..??? காஸ்ட் கட்டிங்..!!!! பாலை மிச்சம் பண்றானுகளாம்.. பக்கோடா வாயனுக..!!”

“ஓ..!! இதுல இப்படி ஒரு சைக்காலஜி இருக்கோ..??”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்… இண்டஸ்ட்ரியே ஒன்னும் சரியில்ல மச்சி..!! போற போக்கை பாத்தா.. இன்னும் கொஞ்ச நாள்ல.. நாமள்லாம் கோவணத்தை கட்டிக்கிட்டு கோட் அடிக்கிற நெலமை வந்தா கூட ஆச்சரியப் படுறதுக்கு இல்ல..!!”

“ஹாஹாஹாஹா..!!”

2

அசோக் அவ்வாறு சிரித்துக் கொண்டிருக்கும்போதுதான் நேத்ரா கேஃப்டீரியாவுக்குள் நுழைந்தாள். ஓரிரு வினாடிகள் சுற்றும் முற்றும் பார்த்தவள், அப்புறம் இவர்கள் அமர்ந்திருந்த இடத்தை கண்டு கொண்டதும், நேராக இவர்களை நோக்கி விறுவிறுவென நடந்து வந்தாள். அவளுடைய முகம் கடுகடுவென இருந்தது. ஏதோ கோபத்தில் இருக்கிறாள் என்று தெளிவாக தெரிந்தது. வேகமாக நடந்து இவர்களை நெருங்கியவள், குனிந்து சான்ட்விச் கடித்துக்கொண்டிருந்த கோவிந்தின் தலையில் ‘நங்..’ என்று ஒரு குட்டு வைத்தாள்.

“ஆஆஆஆஆ…!!”

சான்ட்விச் நிரம்பிய வாயுடன் கோவிந்த் கத்தினான். அவன் கத்தவும், மற்ற எல்லோரும் குபுக்கென எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டார்கள். எல்லோரும் சிரித்து முடித்தபிறகும், ஹரி மட்டும் ‘ஹாஹாஹாஹா..!!’ என்று கூடக்கொஞ்ச நேரம் சிரித்தான். தலையை நிமிர்த்தி ஹரியை அப்படியே முறைத்து பார்த்த கோவிந்த், இப்போது நேத்ராவை ஏறிட்டு சற்று எரிச்சலாகவே கேட்டான்.

“ஹேய்.. வாட் ஹேப்பன்ட் டூ யூ..?? எதுக்கு இப்போ தேவை இல்லாம அடிச்ச..??”

நேத்ரா பதில் சொல்லாமல் காலியாக கிடந்த சேரில் அமர்ந்து கொண்டாள். அமர்ந்த பிறகும் எதுவும் பேசாமல் கோவிந்தையே முறைத்துப் பார்த்தாள். ‘கேக்குறன்ல..?? சொல்லு..’ என்று கோவிந்த் திரும்ப கேட்டும் புண்ணியம் இல்லை. இப்போது ப்ரியா பொறுக்க முடியாமல் நேத்ராவிடம் கேட்டாள்.

“ஹேய்.. என்னாச்சு நேத்ரா.. ஏன் இப்படி டென்ஷனா இருக்குற..??”

“பாரு ப்ரியா.. என்னை கேக்காம.. சிங்கிங் காம்படிஷனுக்கு என் பேரை குடுத்திருக்கான்..!!” நேத்ரா ஒருவழியாய் வாய் திறந்து பேசினாள்.

“ஓ.. அவ்ளோதான மேட்டர்..??” எல்லோருக்கும் சப்பென்று போனது.

“ப்ச்.. நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன்.. அவ்ளோதானான்னு எல்லாம் கூலா கேக்குறீங்க..??”

“ஹேய் நேத்ரா.. இதுல என்னப்பா இருக்கு..??” கோவிந்த் இப்போது நேத்ராவிடம் பாவமாக கேட்டான்.

“என்ன இருக்கா..?? அறை வாங்கப்போற எங்கிட்ட..!! அதெப்படி நீ எங்கிட்ட கேக்காம என் பேரை குடுக்கலாம்..??” நேத்ரா அவனிடம் எரிந்து விழுந்தாள்.

“கேட்டா நீ குடுக்க விட மாட்ட.. அதான் நானா குடுத்தேன்..!!”

“நீ என் பேரை குடுத்தது எனக்கு புடிக்கல.. போய் என் பேரை வாபஸ் வாங்கு.. போ..!!”

“ப்ச்.. ஏன் இப்படி பேசுற..?? நீதான் நல்லா பாடுவல.. அப்புறம் என்ன..??”

“நான் ஏதோ சும்மா ஜாலியா பாடுறேன்..!! அதுக்காக.. ஸ்டேஜ்ல போய் பாடுறதுலாம்.. எனக்கு புடிக்கல.. எனக்கு ஒருமாதிரி இருக்கு..!! ப்ளீஸ் கோவிந்த்.. நீயே போய் என் பேரை அந்த லிஸ்ட்ல இருந்து ரிமூவ் பண்ண சொல்லிடு.. ப்ளீஸ்..!!”

“ம்ஹூம்.. அதுலாம் முடியாது.. நீ பாடனும்..!!”

“என்னால பாட முடியாது.. போதுமா..??”

நேத்ரா கோபமாக சொல்லிவிட்டு, பார்வையை வேறெங்கோ திருப்பிக் கொண்டாள். எல்லோரும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள். கோவிந்த் கொஞ்ச நேரம் நேத்ராவின் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.

“இங்க பாரு நேத்ரா.. நான் சும்மா உன்னை சீண்டுறதுக்காக உன் பேரை குடுக்கலை..!! உனக்கு ஸ்வீட்டான வாய்ஸ் இருக்கு.. ரொம்ப அழகா பாடுற..!! இந்த விஷயம் எங்களுக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா..?? இந்த கம்பனில இருக்குற எல்லாருக்கும் தெரிய வேணாமா..?? இது ஒரு ஆப்பர்ச்சூனிட்டி..!! உனக்கு இருக்குற டேலன்ட்டை உள்ளயே வச்சிருந்தா.. அதனால என்ன யூஸ்.. சொல்லு பார்ப்போம்..?? அதை வெளிச்சம் போட்டு காட்டுறதுதான்.. அந்த டேலன்ட்டுக்கு நீ தர்ற மரியாதை..!! எனக்கு ஆசையா இருந்தது நேத்ரா.. நீ அவ்ளோ பேர் முன்னாடி ஸ்டேஜ்ல பாடனும்.. எல்லாரும் உன் வாய்ஸ் கேட்டு என்ஜாய் பண்ணனும்.. நல்லாருக்குன்னு கை தட்டனும்.. உன்னை பாராட்டனும்.. இதெல்லாம் பாக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருந்தது..!! அதான் உன்னை கேக்காம.. நானா உன் பேரை குடுத்துட்டேன்.. நான் செஞ்சது தப்புனா.. ஐம் ரியல்லி வெரி ஸாரி..!! பட்.. பாட மாட்டேன்னு மட்டும் சொல்லாத நேத்ரா.. ப்ளீஸ்..!!”

நிதானமாக பேசிய கோவிந்த் கெஞ்சலாக முடித்தான். எல்லோரும் ஒருவித வியப்புடன் அவன் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தனர். நேத்ராவும் இப்போது கோவிந்தின் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குள் ஏதோ ஒரு உணர்ச்சி பொங்குவது போலிருக்க, உதடுகளை கடித்து கட்டுப்படுத்தியவாறே, அவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளுக்கு அருகில் இருந்த கவிதா அவளுடைய தோளைப் பற்றி உலுக்கினாள்.

“ஹேய்.. கோவிந்த் சொல்றதுதான் கரெக்ட்..!! நீ இந்த காம்படிஷன்ல கலந்துக்கிட்டே ஆகணும் நேத்ரா..!!” என்றாள்.

“யெஸ்.. யு ஹேவ் டு பார்ட்டிஸிப்பேட்..!!!” மற்றவர்களும் இப்போது கோரஸாய் சொன்னார்கள். ஹரி மட்டும்..

“அதுசரி.. அப்படினா.. ஆனுவல் டே அன்னைக்கு ஆடிட்டோரியம் பக்கத்துல லோபர்மைட் டேப்லட் சில்லறைல வித்தா.. பெத்த லாபம் பாக்கலாம்னு சொல்லுங்க..!!” என்றான்.

“எ..என்ன சொல்றீங்க..??” கவிதா புரியாமல் கணவனை கேட்டாள்.

“ஆமாம்.. இவ பாடுறதை கேட்டு அன்னைக்கு எத்தனை பேருக்கு வாந்தி பேதி புடுங்கப் போகுதோ..??”

ஹரி கேலியாக சொல்ல, நேத்ரா இப்போது கடுப்புடன் அவனை ஏறிட்டு முறைத்தாள். டேபிளில் இருந்த உப்பு டப்பாவை எடுத்து அவன் மீது சரக்கென வீசினாள். அவன் அதை கேட்ச் பிடித்துக்கொள்ள, இவள் சீற்றமாக சொன்னாள்.

“யூ…!!! என் வாய்ஸ் என்ன அவ்வளவு கேவலமா..?? பாக்கலாம்.. நான் பாடத்தான் போறேன்.. ஆனா யாருக்கும் நீ சொன்ன டேப்லட் தேவைப்படாது..!! உனக்கு வேணும்னா.. நாலு ஜெலுசில் கொண்டு வா.. வயித்தெரிச்சலை கண்ட்ரோல் பண்ணிக்க தேவைப்படும்..!!”

“ஹாஹா.. பாத்தீங்களா.. நீங்கல்லாம் எவ்ளோ கெஞ்சுனீங்க..?? நான் ஒருத்தன் இப்படி கலாய்ச்சதும்.. எப்படி ரோஷமா ஒத்துக்கிட்டா பாத்தீங்களா..??”

ஹரி அப்படியே பிளேட்டை திருப்பி போட, இப்போது எல்லோரும் அவனை புன்னகையும் நட்புமாய் பார்த்தார்கள். நேத்ரா மட்டும் சற்றே வெட்கமுற்றவளாய் தலையை கவிழ்த்துக் கொண்டாள். பிறகு அப்படியே தன் கருவிழிகளை ஒரு சுழற்று சுழற்றி ஓரத்துக்கு தள்ளி.. கோவிந்தை பார்த்தாள்..!!

இப்போது கவிதா திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் சேரில் இருந்து எழுந்து கொண்டாள்.

“ஹையோ.. கட்லட் ஒன்னு ஆர்டர் பண்ணினேன்பா.. மறந்தே போயிட்டேன்.. பேசிட்டு இருங்க.. நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்..!!”

என்றவாறு ஃபுட் கவுன்ட்டர் நோக்கி நடந்தாள். ஹரி அதற்காகத்தான் காத்திருந்தவன் மாதிரி, அசோக்கிடம் திரும்பி சன்னமான குரலில் சொன்னான்.

“மச்சி.. உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா..??”

“எனக்கு என்னடா தெரியுது..?? உலகத்துல நடக்குற எல்லா மேட்டரும் உன் ஒருத்தனுக்கு மட்டுந்தான் தெரியுது.. அது எப்படித்தான் நீ தெரிஞ்சுக்குறியோ.. எனக்கு ஒன்னும் புரியலை..!! ஹ்ம்ம்.. என்ன மேட்டர்.. சொல்லு..!!”

“நம்ம டீம்ல புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ண போகுது மச்சி..!!”

“ஓ.. அப்படியா..??” அசோக் தெரிந்தும் தெரியாதவன் போல நடித்தான்.

“ஆமாண்டா.. தமிழ் பொண்ணுதான்..!! ப்ரியாதான் அந்தப்பொண்ணை இன்டர்வ்யூ பண்ணது.. ஏன் ப்ரியா.. அசோக்ட்ட சொல்லலை..??”

“இன்டர்வ்யூலாம் எடுக்க ஆரம்பிச்சுட்டியா ப்ரியா..?? சொல்லவே இல்லை..??” அசோக் ப்ரியாவிடம் சற்றே கேலியாக கேட்டான்.

Comments

Scroll To Top