ஐ ஹேட் யூ பட் – 6

(Tamil Hot Stories - I hate You But 6)

Raja 2013-10-04 Comments

ஹரி கெஞ்சலாக சொல்லவும், அசோக் கொஞ்சம் மனம் இளகினான். நேராகவே சென்று கவிதாவிடம் சொல்லிவர ஒத்துக்கொண்டான். இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். ஹரி தனது பணியிடம் செல்லும் பாதையில் திரும்ப, அசோக் எதிர் திசையில் நடந்தான்.

கம்பெனி வளாகம் பிரம்மாண்டமாக இருக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் இல்லையா..?? வளாகத்தின் உட்புறம் நாலாபக்கமும் சிமென்ட்டாலான சாலைகள் அகலமாகவும், நீளமாகவும் ஓடும். சாலையின் ஒருபுறம், காம்பவுண்ட் சுவரை ஒட்டி, கரும்பச்சை நிறத்தாலான ஸ்டீல் தகடுகள் வேயப்பட்ட கொட்டாரம் இட்டிருப்பார்கள். கொட்டாரத்தின் அடியில் கொஞ்சம் கூட கேப் இல்லாமல், கார்களும் பைக்குகளும் பார்க் செய்யப்பட்டிருக்கும். சாலையின் மறுபக்கத்தில், இளம்பச்சை நிற இலைகள் கொண்ட பெயர் தெரியாத தாவரம், இடுப்பளவு உயரத்திற்கு நெருக்கமாக நடப்பட்டிருக்கும்.

மையப்பகுதியில் சின்ன சின்ன மேடு பள்ளங்களுடன் கோல்ஃப் மைதானம் போன்று பரந்து விரிந்திருக்கும் புல்வெளி..!! அந்த புல்வெளிகளில்தான் ஆங்காங்கே, ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த மாதிரியான கலரில், அவர்கள் வேலை பார்க்கிற கட்டிடங்கள், உடலெல்லாம் கண்ணாடி பாதிக்கப்பட்டு உயர உயரமாய் எழுப்பப்பட்டிருக்கும். ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ‘டவர் ஒன்.. டவர் டூ..’ என்று பெயரிட்டிருப்பார்கள். எல்லா டவர்களையும் தாண்டி சென்றால், வளாகத்தின் பின்பக்க காம்பவுன்ட்டை ஒட்டி இரண்டு கட்டிடங்கள் நின்றிருக்கும். ஒன்று, க்ளையன்ட்டுகள் வந்தால் அவர்களை தங்க வைக்கிற வசதிக்காக கட்டப்பட்ட லக்ஸுரி கெஸ்ட் ஹவுஸ்..!! இன்னொன்றுதான் கம்பனி எப்ளாயிக்கள் ஆரோக்கியமாக பொழுதை போக்குவதற்காக கட்டப்பட்டிருக்கும் உள் விளையாட்டு அரங்கம்.

அசோக் அந்த அரங்கத்துக்குள் நுழைந்தான். அரங்கத்தின் ஒரு பக்கம் பிரம்மாண்டமான ஜிம். இன்னொரு பக்கம் இன்டோர் கேம்ஸ் ஆடுவதற்கான சிறு சிறு அறைகள்.. வரிசையாக..!! அந்த அறைகளுக்குள் கேரம், டேபிள் டென்னிஸ், பேஸ்கட் பால் என விளையாடிக் கொண்டிருந்தவர்களை கடந்து அசோக் நடந்து சென்றான். ஸ்குவாஷ் அரங்கம் இருந்த பகுதிக்கு நகர்ந்தான். வரிசையாக இருந்த நான்கு ஸ்குவாஷ் கோர்ட்டுகளில் கவிதாவை தேடினான். இரண்டாவது கோர்ட்டிலேயே அவள் பார்வைக்கு சிக்கினாள்… அவளோடு விளையாடிக்கொண்டிருந்த ப்ரியாவும்..!!

1

ஸ்குவாஷ் விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியும் அல்லவா..?? நான்கு புறமும் சூழப்பட்ட சுவர்களுக்குள் விளையாடப்பட்டும் உள்ளரங்கு விளையாட்டு. ரப்பர் பந்தும், ராக்கெட் எனப்படும் வலை மட்டையும் கொண்டு ஆடப்படும் ஆட்டம். டென்னிஸ் போன்றதுதான். டென்னிஸ் விளையாடுபவர்கள் எதிரெதிர் பக்கமாக நின்று கொண்டு, பந்தை மாற்றி மாற்றி அடித்துக் கொள்வார்கள். ஸ்குவாஷில் ஒரே பக்கமாக நின்று கொண்டு, முன்பக்க சுவரை நோக்கி பந்தை மாற்றி மாற்றி அடித்து விளையாடவேண்டும். டென்னிஸில் நெட் இருப்பது போல, இங்கு அதே உயரத்திற்கு சுவரோடு பொருந்திய மெட்டல் தகடு இருக்கும். அந்த தகடுக்கு மேல்தான் பந்தை அடிக்கவேண்டும். நாம் சுவற்றில் அடித்த பந்து திரும்பி வரும்போது, அதை எதிராளி திரும்பவும் சுவற்றில் அடிக்க முடியாமல் போனால், நமக்கு ஒரு பாயின்ட்..!!

அசோக் ஓரிரு நிமிடங்கள் கோர்ட்டுக்கு வெளியே நின்று, உள்ளே விளையாடிக்கொண்டிருந்த ப்ரியாவை, கண்ணாடி சுவர் வழியாக கண்களாலேயே விழுங்கினான். அசோக்கிற்கு பொதுவாகவே ஸ்போர்ட்ஸில் இருக்கிற பெண்களை பிடிக்கும். விளையாடுவது பெண்களுக்கு கட்டான உடலை மட்டுமன்றி, முகத்தில் ஒரு தனி களையையும் கொடுப்பதாக அவனுக்கு தோன்றும். பூப்போன்ற தேகம் கொண்டவர்கள், புயல் போல சுழன்றாடி விளையாடுவதே ஒரு தனி அழகுதான். அதுவும் இந்தப்புயல் தன் இதயத்தில் மையம் கொண்ட புயலாக வேறு இருந்து போனதே..?? ஆசையாகவும், ஆர்வமாகவும் ரசித்தான்.

ப்ரியா வெள்ளை நிற டி-ஷர்ட்டும், அதே நிறத்தில் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். முழங்கால் வரை ஸ்கர்ட் மறைத்திருக்க, மீதி கால் வெளுப்பாய், வழவழப்பாய் வெளிப்பட்டிருந்தது. அழகு பாதங்களை அடிடாஸ் ஷூ கவ்வியிருந்தது. கூந்தலை குதிரை வால் போலாக்கி, அங்குமிங்கும் அசைய விட்டிருந்தாள். இடது கை மணிக்கட்டில் ஒரு ரிஸ்ட் பான்ட் அணிந்திருந்தாள். நெற்றியில் வழியும் வியர்வையை அவ்வப்போது அதில் துடைத்துக் கொண்டாள்.

நளினமாக விளையாடிக் கொண்டிருந்தாள் என்றுதான் ப்ரியாவை சொல்லவேண்டும். அழகாக சர்வீஸ் போடுவதும்.. லாவகமாக கோர்ட்டின் மையப்பகுதிக்கு நகர்ந்து கொள்வதும்.. ஓடிச்சென்று அகலமாய் அடியெடுத்து வைத்து கால்களை ஊன்றி, வலது கையை வலுவாக வீசி பந்தை சுவற்றுக்கு அடிப்பதும்.. பாயின்ட் கிடைத்ததும் ‘ஹேய்..’ என்று உற்சாகமாக கத்தி முஷ்டியை மடக்குவதும்..!! ப்ரியா ஸ்குவாஷ் விளையாடுவாள் என்று அசோக்கிற்கு முன்பே தெரியும். ஆனால் அவள் விளையாடுவதை இன்றுதான் பார்க்கிறான். இவ்வளவு அழகாக ஆடுவாள் என்பதை இப்போதுதான் அறிகிறான். அவள் விளையாடும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது அசோக்கிற்கு..!! Mulai Tamil Hot Stories

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top