ஐ ஹேட் யூ பட் – 6
(Tamil Hot Stories - I hate You But 6)
Tamil Hot Stories – “புதுப் ப்ராஜெக்ட்ன்றது, புதுப் பொண்டாட்டி மாதிரி ஃபோக்ஸ்.. ஆரம்பத்துல விட்டுட்டோம்னு வச்சுக்கோங்க.. அப்புறம் கடைசி வரை புடிக்கவே முடியாது..!!”
இது அன்றைய மீட்டிங்கில் திரு. பாலகணேஷ் அவர்கள் தனது திருவாய் மலர்ந்து அருளிய தத்துவம்..!! அவர் எப்போதும் இப்படித்தான். எதற்கெடுத்தாலும் ஏதாவது புதிது புதிதாக உதாரணம் யோசிப்பார். குப்புறப் படுத்தா.. மல்லாக்கப் படுத்தா.. என்று தெரியவில்லை. பெண்கள், பெண்டாட்டி, காதல், கல்யாணம்.. இந்த நான்கு விஷயங்களில் ஒன்றைத்தான் உதாரணங்கள் சொல்ல தேர்ந்தெடுப்பார். கழுத்தில் தொங்குகிற ஐடி கார்டையும், கல்யாணத்தில் கட்டுகிற தாலி கயிறையும் கம்பேர் செய்வார். லைசென்ஸ் என்பார். பவர்ஃபுல் என்பார். பட் டேஞ்சரஸ் என்பார். ஹேண்டில் வித் கேர் என்பார்.
சில நேரங்களில் அவருடைய அசட்டுத்தனமான கம்பேரிசன்கள் அடுத்தவர்களை முகம் சுளிக்க வைக்கும். ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர் அலட்டிக்கொள்வது இல்லை.
“ச்ச.. எனக்கு வாச்ச பொண்டாட்டியும் அப்படித்தான் இருக்குறா.. க்ளையன்ட்டும் அப்படித்தான் இருக்கானுக அசோக்..!!” என்பார் திடீரென.
“ஏன் பாலா.. என்னாச்சு..??” என்று அசோக் சீரியஸாக கேட்பான்.
“என்ன பண்ணினாலும் ரெண்டு பெரும் சாடிஸ்ஃபையே ஆக மாட்டேன்றாங்க..!!”
என்று எஸ்.ஜே.சூர்யாத்தனமாய் ஒரு ஜோக் அடித்து விட்டு இளிப்பார். ‘ஐயே..!!’ என்று மனசுக்குள் தலையில் அடித்துக் கொள்வான் அசோக்.
ஆனால் அன்று அவர் மீட்டிங்கில் சொன்ன தத்துவத்தில் உண்மை இல்லாமல் இல்லை. எந்த ப்ராஜக்ட்டுக்கும் ஆரம்ப கட்டம் மிக முக்கியம். அந்தக்கட்டத்தில் ஸ்லிப் ஆகிவிட்டால், அப்புறம் எல்லாக்கட்டமுமே ‘கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல..’ கணக்காக மாறிவிடும். புதுமனைவியின் விருப்பு, வெறுப்புகளை மனம் விட்டு பேசி தெரிந்து கொள்வது போல, க்ளையன்ட்டின் தேவை, ஆசைகளை மீட்டிங் போட்டு அறிந்து கொள்வது அவசியம்.
‘எங்களிடம் வேலை பார்ப்பவர்களின் சம்பளக்கணக்கை நிர்வகிக்கிற மாதிரி ஒரு மென்பொருள் வேண்டும்..!!’ என்று க்ளையன்ட் கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த மாதிரி ஒரு மென்பொருளை தயாரித்து கொடுப்பதுதான் சாப்ட்வேர் சர்வீஸ் கம்பனிகளின் வேலை. அதைத்தான் ப்ராஜக்ட் என்கிறார்கள். ‘வாழ்க்கைன்றது ஒரு வட்டம்டா..!!’ என்று டாக்டர் ஒருவர் சொல்லியிருக்கிறார் அல்லவா..?? அதுபோல மென்பொருள் அபிவிருத்திக்கும் ஒரு வட்டம் இருக்கிறது. அதை மென்பொருள் அபிவிருத்தி வாழ்க்கை சக்கரம் என்று தமிழ்ப்படுத்தலாம். அந்த சக்கரத்திற்கு நிறைய வடிவங்கள் இருந்தாலும், அதில் வருகிற முக்கியமான கட்டங்கள் என்றும் மாறாது. அவை மூன்று கட்டங்கள்..!!
முதல் கட்டம், ப்ளானிங் – ‘எதையும் ப்ளான் பண்ணாம பண்ணப்படாது..!!’ என்று வடிவேலுவின் வார்த்தைகளை எல்லா சாப்ட்வேர் கம்பனிகளின் சுவற்றிலும் பொன்னெழுத்தில் பொறித்து வைக்க வேண்டும். அந்த அளவிற்கு முக்கியமானது இந்தக்கட்டம். ரெகயர்மன்ட் கேதரிங், எஸ்டிமேஷன், சாஃப்ட்வேர் டிசைன் எல்லாம் இந்தக்கட்டத்தில்தான் வரும். ‘ரெகயர்மன்ட் கேதரிங்’ என்றால் க்ளையண்ட்டுக்கு என்ன தேவை என்று விவரமாக விசாரித்து தெரிந்து கொள்வது. அப்படி தெரிந்து கொள்ளும்போது தெளிவாக இருக்க வேண்டும். அவர்கள் கேட்ட கடலை எண்ணையை கண்ணாடி சீசாவில் ஊற்றிக் கொண்டிருக்கும்போதே, ‘இது நல்லெண்ணைதான..?’ என்று கேட்டு நம்மை குழப்புவார்கள். அதற்கெல்லாம் பித்துப் பிடித்துப் போகாதவாறு, முழு சித்தத் தெளிவுடன் இருக்க வேண்டியது அவசியம்.
எஸ்டிமேஷன்தான் பொதுவாக நிறைய தவறு நடக்கிற ஏரியா. ப்ராஜக்டை எப்படியாவது லவட்டிவிட வேண்டும் என்ற பேராசையால், இரண்டு வருடத்தில் முடிக்கவேண்டிய ப்ராஜக்ட்டை, ஆறு மாதங்களில் முடித்து தருவதாக க்ளையன்ட்டிடம் உதார் விட்டு, கம்பனி மேனேஜ்மன்ட் லவட்டிவிடும். பிறகு டெவலப்பர்களும், மேனேஜர்களும் இந்த விஷயத்தில்தான் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியில் பாப்புலரான ஜோக் ஒன்று இருக்கிறது.
‘கொழந்தை வேணும்னா.. ஒரு பொண்ணையும், பத்து மாசம் டைமும் கொடுங்க..!!’ ன்னு டெவலப்பர் சொல்வான்.
‘இல்ல இல்ல.. உனக்கு பத்துப் பொண்ணு தாரேன்.. ஆனா எனக்கு ஒரே மாசத்துல கொழந்தை வேணும்..!!’ ன்னு மேனேஜர் சொல்வார்.
இந்த விஷயத்தில் மேனேஜருக்கும், டெவலப்பருக்கும் எப்போதுமே ஒத்துப் போகாது. அவர் இவர்களை குறை சொல்வார். இவர்கள் அவரை குறை சொல்வார்கள். அதிருப்தியுடனே ப்ராஜக்ட் முடியும்வரை அலைவார்கள்.
சாஃப்ட்வேர் டிசைன் என்பது, பெரிதாக கோலம் போடுவதற்கு முன்பாக சின்ன சின்னதாக புள்ளி வைத்துக் கொள்கிற மாதிரியான சமாச்சாரந்தான். கட்டிடங்கள் கட்டுவதற்கு முன் வரைந்து வைத்துக் கொள்கிற ட்ராயிங்குகள் மாதிரி. க்ளையன்ட்டுகளிடம் விசாரித்து தெரிந்து கொண்ட அவர்களது தேவைகளை மனதில் கொண்டு, உருவாகப் போகிற மென்பொருள் எந்த மாதிரி இருக்கவேண்டும் என்று முன்கூட்டியே தோராயமாக வடிவமைத்துக் கொள்கிற வேலை. புள்ளிகள் சரியாக வைக்கப்படவில்லையெனில், கோலமும் கோணல் மாணலாய் போய் விட கூடிய வாய்ப்பிருக்கிறது.
இரண்டாவது கட்டம், இம்ப்ளிமண்டேஷன் – வைத்த புள்ளிகளை இணைத்து கோலம் போட ஆரம்பிக்க வேண்டியதுதான். முதல் கட்டத்தில் உருவாக்கிய டிசைனை கொண்டு கோட் எழுதுவதும், அதை டெஸ்டிங் செய்வதும் இந்தக்கட்டத்தில்தான். எல்லா கட்டங்களிலும் இந்த கட்டத்துக்குத்தான் அதிக நேரம் ஒதுக்கப்படும். டெவலப்மன்ட் டீமும், டெஸ்டிங் டீமும் அடித்துக் கொள்கிற கட்டம். அதுவரை மாமன் மச்சான் என்று கொஞ்சித் திரிந்தவர்கள், அக்னி நட்சத்திரம் கார்த்திக், பிரபு போல முறைத்துக் கொண்டு எதிரெதிராக க்ராஸ் செய்து கொள்வார்கள். பாட்டெழுதி பேர் வாங்குகிற கூட்டம் டெவலப்பர் கூட்டம் என்றால்.. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குகிற கூட்டம் டெஸ்டிங் கூட்டம்..!!
மூன்றாவது கட்டம், இன்ஸ்டாலேஷன் – அத்தனை நாளாய் கோட் அடித்து குவித்த குப்பைகளை கொண்டு சென்று, க்ளயன்ட்டின் தலையில் கொட்டுகிற கட்டம். உருவாக்கிய மென்பொருளை க்ளயன்ட்டின் சிஸ்டத்தில் நிறுவவேண்டும். டெப்ளாய்மன்ட்..!! க்ளையண்டும் அவர்கள் பங்கிற்கு ஒரு டெஸ்டிங் டீம் வைத்து மென்பொருளை டெஸ்ட் செய்து கொள்வார்கள். மென்பொருளின் இறுதி வடிவத்தில், பெரும்பாலும் க்ளையண்ட்டுக்கு திருப்தி இராது. ‘ஐயையோ.. நாங்க பார்வதி ஓமனக்குட்டன்ல கேட்டோம்.. நீங்க பரவை முனியம்மாவை டெலிவர் பண்ணிருக்கீங்களே..??’ என்ற ரீதியில் பதறுவார்கள். இவர்களும் ‘ஐயையோ பதறாதீங்கங்க.. கொஞ்சம் மேக்கப் இல்லனா பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணினா சரியாப் போவும்..’ என்ற ரீதியில் சமாளித்து, தலையில் கட்டித் திரும்புவர். சில கில்லாடி சாப்ட்வேர் கம்பனிகள் தொடர்ந்து அந்த மேக்கப் போடும் பணிக்காக, மெயின்டனஸ் காண்ட்ராக்ட் வேறு தனியாக போட்டு துட்டு தீட்டுவார்கள்.
சரி. இதெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்று கேட்கிறீர்களா..?? காரணம் இருக்கிறது. கதையை தொடர்ந்து படிப்பதற்கு முன்பு சாப்ட்வேர் கம்பனி இயங்கும் விதம் பற்றி இந்த அளவிற்காவது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பது எனது அபிப்ராயம்..!!
இப்போது இவர்களது ப்ராஜக்ட் இருப்பது ப்ளானிங் ஸ்டேஜில்..!! முதல் கட்ட ரெகயர்மன்ட் கேதரிங் முடிந்துவிட்டது. அடுத்த கட்ட ரெகயர்மன்ட் கேதரிங்குக்கு, இன்னும் சில நாட்களில் அமெரிக்காவிற்கே யாரையாவது நேரிடையாக அனுப்பி வைப்பார்கள். டிசைன் ஆரம்பித்து விட்டார்கள். ஃப்ரேம்வொர்க் டெவலப் செய்வதுதான் இப்போது டீமின் பிரதான வேலை. ஃப்ரேம்வொர்க் என்றால் என்னவென்று எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், உருவாக்கப் போகிற முக்கியமான மென்பொருளுக்கு அடித்தளமான மென்பொருள் என்று சொல்லலாம். ஃப்ரேம்வொர்க் சரியாக அமையாமல் போனால், ‘பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மட்டம் கொஞ்சம் வீக்கு..’ கதையாகி விடும்.
ஃப்ரேம்வொர்க் டெவலப் செய்வதற்கான மொத்த வேலைகளும் டீமில் எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டிருந்தது. ஆளுக்கொரு காம்போனன்ட் என்று டிசைன் அண்ட் டெவலப்மன்ட் செய்ய ஆரம்பித்து இப்போது ஒருவாரம் ஓடிவிட்டது. அத்தனை நாளாய் ஜாலியாய் சுற்றித் திரிந்த அனைவரும் இப்போது சைலண்டாகிப் போயிருந்தனர். அவர்கள் வேலை பார்க்கும் தளத்தில் கேட்கும் அரட்டை சத்தம் அறவே வற்றிப் போயிருந்தது. எல்லோரும் தீயாக வேலை பார்த்தார்கள்..!!
அசோக் ஆபீஸ் நேரத்தில் வழக்கமாக மூன்று தம் அடிப்பான். ஃப்ரேம்வொர்க் வேலை ஆரம்பித்த பிறகு, அந்த மூன்று ஆறாகிவிட்டது. அன்று மாலை அவன் தம்மடிக்க ஸ்மோகிங் ஏரியா சென்றபோது, அவனுக்கு பின்னாடியே ஹரியும் வந்தான்.
“எனக்கு ஒரு தம் குடுடா மச்சி.. ஒரே ப்ரஷ்ஷ்ஷ்ஷரா இருக்கு..!!” என்றான் வெறுப்பான குரலில்.
“என்னடா.. தைரியமா தம்மடிக்க வந்துட்ட..?? உன் வொய்ஃப் இல்லையா..??” கேட்டுக்கொண்டே சிகரெட் எடுத்து நீட்டினான் அசோக்.
“உன் ஆளும் என் ஆளும் மட்டையை தூக்கிட்டு வெளையாட கெளம்பிட்டாங்க.. அவங்களுக்கும் ஒரே ப்ரஷ்ஷ்ஷ்ஷர் போல..!!” ஹரி சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான்.
“உன் ஆளு சரி.. அது யாரு என் ஆளு..??” கேலியாக கேட்டவாறே, அசோக்கும் சிகரெட்டின் தலைக்கு கொள்ளி வைத்தான்.
Comments