ஐ ஹேட் யூ பட் – 34
( Tamil Hot Stories - I Hate U But 34)
இவர்கள் சென்று சேர்ந்த அரை மணி நேரத்திற்கெல்லாம், ராஜேஷ் தம்புவுடன் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தான். கணவனை கண்டதுமே, அதுவரை எங்கேயோ வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்த செல்வி, ‘என்னங்க..’ என்று கத்தியவாறு எழுந்து ஓடினாள்.
“அ..அவனுக்கு.. அவனுக்கு..” என்று வார்த்தை வராமல் திணறினாள். உடைந்து போய் அழ ஆரம்பித்தாள்.
“அழாதம்மா.. ஒண்ணுல்ல.. ஒண்ணுல்ல..!!” ஆறுதலாய் சொன்னவாறே ராஜேஷ் அவளை அணைத்துக் கொண்டான்.
“நைட்டு ஒரு கெட்ட கனவுன்னு காலைலேயே சொன்னனேங்க.. இப்படி ஆயிடுச்சே..??”
“அழாத செல்வி.. ப்ளீஸ்..!!”
“அவன் கை காலெல்லாம் ஒரே ரத்தங்க..!!”
சொல்லிவிட்டு செல்வி கண்ணீரை சிந்த ஆரம்பித்தாள். மனைவியின் அழுகை ராஜேஷையும் பாதித்தது. அவனுடைய கண்களும் மெல்ல கசிய ஆரம்பிக்க, அதை அவசரமாய் துடைத்துக் கொண்டான். அவர்களையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவுக்கு, ‘சண்டை போடுறது எங்களுக்கு ஹாபி மாதிரி..!!’ என அசோக் அன்று புன்னகையுடன் சொன்னது ஞாபகம் வந்தது. வெளியே சண்டை போட்டுக்கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்குள் இருக்கும் பாசப்பிணைப்பை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ‘இந்த குடும்பத்தில் ஒருத்தியாக எனக்கு கொடுத்து வைக்கவில்லையே..’ என்பது மாதிரியான ஒரு ஆதங்கம் அவளையும் அறியாமல் அவளுக்குள் எழுந்தது.
“ஹை.. ப்ரியா சித்தி..!!”
தம்பு கத்திக்கொண்டே அப்பாவின் கைகளில் இருந்து விடுபட்டு, ஓடிவந்து ப்ரியாவை கட்டிக்கொண்டான். சற்றே ஆச்சரியத்தில் திளைத்த ப்ரியாவும், உடனே அவனை ஆரத்தழுவிக் கொண்டாள். ‘ப்ரியாவின் புகைப்படத்தை காட்டி இவள்தான் உன் சித்தி என யாரோ சொல்லியிருக்கிறார்கள்’ என்பது மட்டும் எல்லோருக்கும் புரிந்தது. ஆனால்.. செல்வியாயிருக்கும் என ராஜேஷும்.. ராஜேஷாய் இருக்கும் என செல்வியும்.. அவர்கள் இருவருமாயிருக்கும் என அடுத்தவர்களும் நினைத்துக் கொண்டார்கள்..!! ‘இவள் எப்படி இங்கே..?’ என்று குழம்பிய ராஜேஷுக்கு ப்ரியா பற்றி செல்வியே எல்லாம் சொன்னாள்..!!
நண்பகல் ஒரு மணி அளவில்.. நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து.. அசோக் பொது வார்டுக்கு மாற்றப்பட்டான்..!! ஆனால் சிகிச்சைக்காக அளிக்கப்பட்டிருந்த செடேட்டிவ் அவனை மயக்கத்துடனே வைத்திருந்தது. இடையில் ஒருமுறை அரைகுறை மயக்கத்துடன் அவன் விழித்தபோதே, அவனிடம் ஆறுதலாக ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு, காரில் வந்த அனைவரும் திரும்ப ஆபீஸ் கிளம்பினார்கள்.
‘நான் வரல.. நீங்க கெளம்புங்க..’ என்று ப்ரியா மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். மயக்கத்தில் இருக்கிற அசோக்கின் அருகில் அமர்ந்தவாறு, அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். தனது முட்டாள்த்தனமான கோவத்தினால் கைமுறிந்து சுனங்கிப்போய் படுத்திருக்கும் காதலனை இரக்கத்துடன் பார்த்தாள். அவ்வப்போது அவளையும் அறியாமல் கண்களில் வழிந்த நீரை ரகசியமாய் துடைத்துக் கொண்டாள். யாரும் கவனிக்கவில்லை என்று தோன்றும்போது, தனது கையால் அசோக்கின் கையை பற்றி வாஞ்சையுடன் தடவினாள். ப்ரியாவின் இந்த செய்கைகளை எல்லாம் கவனித்த செல்வி, அவளை சற்றே வியப்பாகவும் வித்தியாசமாகவும் பார்த்தாள்.
மாலையில் அசோக் கண்விழித்து எழுந்ததும்.. எழுந்ததுமே அவன் சகஜமாக பேச ஆரம்பித்ததும்.. அதுவரை அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலை தளர்ந்து.. ஒரு இலகுவான சூழ்நிலை மெல்ல திரும்பியது..!! ப்ரியா மட்டும் அங்கேயே தங்கிவிட்டது அசோக்கை சற்றே ஆச்சரியமுற செய்தது. ஆனால் அவனுடைய மனமோ அவள் மீது ஒருவித வெறுப்பில் உழன்றதால், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் அவன் காட்டிக்கொள்ளவில்லை. கடந்த சில நாட்களாகவே கொஞ்சம் கொஞ்சமாய் ப்ரியாவின் மீது ஏறியிருந்த வெறுப்பு, இன்று உச்சபட்சத்தை எட்டியிருந்ததுதான் காரணம்.
அசோக் ப்ரியாவின் முகத்தை நேரிடையாக பார்ப்பதையே தவிர்த்தான். ஒருமுறை எதேச்சையாக பார்க்க நேர்ந்தபோது, அவள் பார்வையாலேயே பரிதாபமாக கெஞ்ச.. இவன் அவளை அலட்சியம் செய்தான்..!!
அசோக்கிற்கு ஸ்பூனில் சாப்பாடு ஊட்டிக்கொண்டே.. செல்வி அவன் மீதிருந்த அன்பை வெளிப்படுத்தினாள்.. அவளுடைய பாணியில்.. அவளுக்கு தெரிந்த விதத்தில்.. அதிகாரமும், கோபமுமாக..!!
“என்னைக்காவது யார் சொல்றதையாவது காது குடுத்து கேட்டாத்தான.. பொறுமையா போடா பொறுமையா போடான்னு.. எத்தனை நாள் சொல்லிருப்பேன்..?? பைக்கு ஓட்டுறதுனா எதோ ப்ளைட்டு ஓட்டுறது மாதிரி நெனைப்பு.. அப்படியே எடுத்த வாக்குல விர்ர்ருனு பறக்குறது..!!” என்று குழைத்த சாதத்தை அவனுடைய வாயில் திணித்தவாறே முறைப்பாக சொன்னாள்.
“ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆஆ.. ஆரம்பிச்சாச்சா..??” அசோக் சலிப்பாக சொன்னவாறே சாதத்தை மென்றான்.
“அப்படி என்ன தலை போற அவசரம்னு கேக்குறேன்..?? எந்த கோட்டையை புடிக்க அம்புட்டு வேகம்..??” செல்வி அவனிடம் கேட்கும்போதே, ப்ரியாவுக்கு இங்கே சுருக்கென்று இருந்தது. Koothi Nakkum Tamil Hot Stories
– தொடரும்
What did you think of this story??
Comments